»   »  என்னய்யா நடக்குது?: திருமண அறிவிப்புக்கு பிறகு அதிர்ந்து போயிருக்கும் சமந்தா

என்னய்யா நடக்குது?: திருமண அறிவிப்புக்கு பிறகு அதிர்ந்து போயிருக்கும் சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமண திட்டங்களை அறிவித்த பிறகு சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்துவிட்டதாம்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறப்பவர் சமந்தா. அவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருகிறார்.

அடுத்த ஆண்டு அவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் இது குறித்து சமந்தா கூறுகையில்,

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

என் திருமண திட்டம் குறித்து அறிவித்த நாளில் இருந்து பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அதை பார்த்து என்னடா நடக்குது என்று தோன்றுகிறது?

ஹிட்

ஹிட்

இந்த ஆண்டு முழுவதும் நான் அடுத்தடுத்து ஹிட் கொடுத்துள்ளேன். தமிழில் 24, தெலுங்கில் நான் நடித்த அ ஆ மற்றும் ஜனதா கராஜ் ஆகிய படங்கள் ஹிட்டாகியுள்ளன.

ஏன்?

ஏன்?

இத்தனை ஹிட் கொடுத்தும் ஏன் என்னை ஒதுக்குகிறார்கள்? சமந்தா நாகர்ஜுனாவின் மருமகள். அவருடன் எப்படி பணியாற்றுவது என தயாரிப்பாளர்கள் முணுமுணுக்கிறார்கள்.

திருமணமான நடிகைகள்

திருமணமான நடிகைகள்

திருமணமான நடிகைகள் பற்றி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள நம்பிக்கையை மாற்ற விரும்புகிறேன். எனக்கு பிற நடிகைகளை பற்றி தெரியாது. ஆனால் நான் திருமணத்திற்கு பிறகு எங்கும் போகப் போவது இல்லை.

English summary
Samantha is shocked on seing movie offers getting dried of late after her wedding announcement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil