»   »  ‘வடசென்னை’யில் இருந்து வெளியேறி ‘ரெமோ’வைப் பிடித்த சமந்தா!

‘வடசென்னை’யில் இருந்து வெளியேறி ‘ரெமோ’வைப் பிடித்த சமந்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திக்கேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய இரு வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக பொன்ராம்-சிவகார்த்திகேயன் வெற்றிக் கூட்டணி புதிய படவேலைகளைத் தொடங்கியுள்ளனர்.

Samantha, Sivakarthikeyan team up for first time

இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஜோடி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர்.

சிவகார்த்திக்கேயன் பெண் வேடத்தில் நடித்துள்ள 'ரெமோ' திரைப்படம் வருகிற அக்டோபர் 7-ந் தேதி ரிலீசாகிறது. அதனைத் தொடர்ந்து மோகன்ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பிறகு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் பொன்ராம் இயக்கும் படத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்க இருக்கிறார். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

தற்போது இப்படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகி உள்ளார். விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் புதிய படவாய்ப்புகளை சமந்தா மறுத்து வருவதாக முன்னர் கூறப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை வாய்ப்பை கூட அவர் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், சிவகார்த்திக்கேயன் படத்திற்கு அவர் ஓகே சொல்லி இருப்பது திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய படம் குறித்த தகவலை சமந்தாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

English summary
Actors Sivakarthikeyan and Samantha Ruth Prabhu are all set to team up for the first time in an upcoming untitled Ponram Tamil directorial.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil