For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கல்யாணத்துக்கு பிறகு… மாற்றம் முன்னேற்றம் சமந்தா…!

  |
  திருமணத்திற்கு பின் தெறிக்க விடும் 'சமந்தா'. No. 1 நடிகையா? Rangasthalam song reached 100M views

  ஐதராபாத்: சமந்தாவின் ரங்கம்மா பாடல் பத்து கோடி பார்வையாளர்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

  பொதுவாக கல்யாணத்திற்கு பிறகு ஆண்கள் அழகாவார்கள் என ஒரு பேச்சு உண்டு. ஆனால் கல்யாணம் செய்து இன்னும் புதுப்பொண்ணாகவே வலம் வரும் சமந்தா நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே போகிறார். அதற்கு தற்போதைய சீமராஜா படம் நல்ல உதாரணம்.

  கல்யாணத்திற்கு பிறகு அவர் கவர்ச்சி காட்டும்போது கொடுக்கும் முக பாவனைகள் கூட மிக நேர்த்தியாக வெளிப்படுகிறது.

  பாடல்

  பாடல்

  சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படத்தின் ரங்கம்மா மங்கம்மா பாடல் பத்து கோடிக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. பொதுவாக ஒரு பாடல் வெளியாகும் நேரத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும். அதற்கு, படக்குழுவினர் செய்யும் புரமோஷன், நடிகர்கள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வம், தன்னுடைய நடிகரின் பாடலை ஹிட் அடிக்க வைக்க வேண்டும் என்று அதிகமாக ஷேர் செய்வார்கள். ஆனால் இந்த பாடல் வெளியாகி நான்கு மாதங்களுக்குப் பிறகு பத்து கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

  மல்லிகைப்பூ

  மல்லிகைப்பூ

  பாடலின் மெட்டு, அதனுடைய வரிகள், படமாக்கப்பட்ட விதம் என அனைத்துமே அருமையாக இருப்பதுதான் காரணம். முரண்டுபிடிக்கும் ஆளாக ராம்சரண் வருவது, ராம்சரனை கிண்டலடித்துக்கொண்டே வலையில் சிக்க வைக்க சமந்தா முயற்சிப்பது, பாடல் முழுவதும் மல்லிகைப் பூ, புடவை என மங்களகரமாக இருக்கும் சமந்தா கவர்ச்சியிலும் கலக்குகிறார். குறும்புத்தனமாக அவர் கொடுக்கும் சின்ன சின்ன பாவனைகள் ரசிக்க வைக்கின்றன.

  லொகேஷன்

  சிலம்பம் சுத்திகிட்டே வந்து ராம்சரணை கிஸ் பண்ண முயற்சிப்பது போல ஒரு நடன மூவ்மென்ட் இருக்கிறது. அம்சமாக இருக்கிறது அதை பார்ப்பதற்கு. கடுமையான சிலம்பம் பயிற்சி இல்லாமல் அவ்வளவு லாவகமாக அதை செய்ய முடியாது. அந்த குறிப்பிட்ட சிலம்பம் சுழற்சியை பல முறை பயிற்சியெடுத்து ஆடியிருக்கிறார் சமந்தா. அதேபோல் பாடல் படமாக்கப்பட்ட லொகேஷன் எல்லாமே கிராமங்களுக்குக் கூட்டிச் செல்லும் கொள்ளை அழகாக காட்சியளிக்கின்றன.

  தேவி ஸ்ரீபிரசாத்

  தேவி ஸ்ரீபிரசாத்

  பொதுவாக குத்துப்பாடல்கள் என்றாலே காளான் போல சில நாட்களில் காலி ஆகிவிடும் என்பதை இந்த பாடல் உடைத்திருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத்துக்குள்ளேயும் எதோ இருக்கு பாரேன் என்று உணர வைக்கிறது. ரொம்ப சந்தோஷமா இருக்கேன், நல்லா நின்னு நிதானமா ஒரு குத்தாட்டம் போடனும்னு நினைக்கிறவங்க இந்த பாட்ட கேட்டு ஆடலாம்னு சத்தியம் செய்து சொல்லலாம் என்கிற வகையில் அமைந்திருக்கிறது. அது என்னமோ தெரியல, என்ன மாயமோ புரியல, மனுஷன் தெலுங்கு படத்துக்கு மட்டும் இப்படி மயக்கம் வர்ற மாதிரி பாட்டை கொடுத்துவிடுகிறார். தாரைத் தப்பட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற ஆட்டக்காரி மாமன் பொண்ணு பாடலை பாடிய எம்.எம்.மானசி இப்பாடலை நன்றாக பாடியுள்ளார்.

  English summary
  Rangasthalam movie song Rangamma Mangamma crossed more than 10 million views.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X