கண்ணாடி கழட்டல.. சிரிப்பே இல்லை.. மும்பை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த சமந்தா!

மும்பை: நடிகை சமந்தா மும்பை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்து சென்ற போது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகள் தீயாக பரவி வருகிறது.

நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதன் காரணமாக அவர் தீவிர சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.

உடல்நலம் குன்றிய நிலையிலும், ட்ரிப்ஸ் போட்டுக் கொண்டே யசோதா படத்திற்கு டப்பிங் பேசி அந்த படத்தை ரிலீஸ் செய்து 50 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை ஆடினார் சமந்தா.

மீண்டும் எழுந்து வந்த சமந்தா

மீண்டும் எழுந்து வந்த சமந்தா

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இதற்கு மேல் அவரால் எழுந்து நடக்கவே கஷ்டம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை ராஜநடை போட்டு சமந்தா நடந்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

நான் இன்னும் சாகல

நான் இன்னும் சாகல

யசோதா படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா அளித்த பேட்டியில் கண் கலங்கி பேசியிருந்தார். அப்போது, அவர் நான் இன்னும் சாகல லேசான உடல்நலக் குறைவு தான் மீண்டும் வருவேன் என தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திய சமந்தா சொன்னது போலவே மீண்டும் எழுந்து நடந்து வந்த காட்சிகள் சமந்தா ரசிகர்களை ஹாப்பி ஆக்கி உள்ளது.

ரசிகர்களுடன் செல்ஃபி

ரசிகர்களுடன் செல்ஃபி

செல்ஃபி புள்ள சமந்தாவை எப்படி பார்த்தாலும் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் அல்லவா? அப்படி பெரிய கூலிங் கிளாஸ் அணிந்து அமைதியாக சமந்தா நடந்து சென்ற நிலையிலும், அவரை அடையாளம் கண்டு கொண்ட சில ரசிகர்கள் அருகே வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு சென்றனர்.

கண்ணாடியை கழட்டல

கண்ணாடியை கழட்டல

ஆனால், ரசிகர்களை பார்த்து செல்ஃபிக்கு போஸ் கொடுத்த நிலையிலும் நடிகை சமந்தா தனது பெரிய கண்ணாடியை கழட்டவில்லை. அதே நிலையில் தான் சில ரசிகர்களுடன் செல்ஃபி போட்டோக்கள் எடுத்துக் கொண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

பெரிதாக சிரிக்கல

பெரிதாக சிரிக்கல

எப்போதுமே ரசிகர்களை பார்த்தால் செம ஹாப்பியாக சிரித்து அவர்களையும் சந்தோஷப்படுத்தும் நடிகை சமந்தா ரொம்பவே ரோபோ போல பெரிதாக சிரிக்காமல் வெறுமனே செல்ஃபிக்கு போஸ் கொடுத்து விட்டு அங்கே இருந்து கிளம்பிச் சென்ற காட்சிகள் மனதளவில் அவர் பெரிதாக உடைந்துள்ளார் என ரசிகர்களை கமெண்ட் போட வைத்துள்ளது.

பாலிவுட் படத்திற்காகவா

பாலிவுட் படத்திற்காகவா

சமந்தா நடிப்பில் விரைவில் சகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது. உடல் நலக் குறைவு காரணமாக ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் இருந்து சமந்தா விலகியதாக பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், மீண்டும் மும்பைக்கு சமந்தா பறந்து சென்றுள்ள நிலையில், மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்கப் போகிறாரா? சமந்தா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விரைவில் பழையபடி

விரைவில் பழையபடி

கூடிய விரைவிலேயே நடிகை சமந்தா பழையபடி தனது இடத்தை பிடிப்பார் என்றும் உடல் நலம் நன்றாக தேறி உள்ள நிலையில் தான் மும்பைக்கு வேலை விஷயமாக இன்று காலை சமந்தா கிளம்பி சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்கள் தற்போது சமந்தா கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X