For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சமந்தாவை பாதித்த Myositis.. மூச்சுக் கூட சரியா விட முடியாதாம் .. என்ன என்ன பிரச்சனை வரும் தெரியுமா?

  |

  சென்னை: சுமார் 3 மாதங்கள் ட்ரீட்மென்ட் எடுத்தும் இன்னமும் பூரண குணமாகவில்லை என ரொம்பவே கஷ்டத்துடன் தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை நடிகை சமந்தா தெரிவித்து ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இன்டஸ்ட்ரியையும் ஷாக் ஆக்கி உள்ளார்.

  சமந்தா மற்றும் நாக சைதன்யா ஒருவரை ஒருவர் பிரிகின்றனர் என்கிற செய்தி எந்த அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோ அதை விட ரசிகர்களை பல மடங்கு இந்த நோய் பாதிப்பு குறித்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது.

  #SamanthaRuthPrabhu என்ற ஹாஷ்டேக்கை போட்டு பிரபலங்களும் ரசிகர்களும் கெட் வெல் சூன் சமந்தா என பதிவிட்டு வருகின்றனர். சரி மயோசிடிஸ் என்றால் என்ன அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? மருத்துவ ரீதியான தீர்வு என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

  வாடகைத் தாயான சமந்தா… ஆக்சன் திரில்லரில் மிரட்டும் யசோதா ட்ரெய்லர்….வாடகைத் தாயான சமந்தா… ஆக்சன் திரில்லரில் மிரட்டும் யசோதா ட்ரெய்லர்….

  முடியாத நிலையிலும் டப்பிங்

  முடியாத நிலையிலும் டப்பிங்

  தி ஃபேமிலி மேன் படத்தில் புரட்சிகர பெண்ணாக நடித்து ஆக்‌ஷனில் பட்டையை கிளப்பி இருந்தார் நடிகை சமந்தா. சமீபத்தில் வெளியான யசோதா படத்தின் டிரைலரிலும் ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து மிரட்டி உள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கான டப்பிங்கை செய்யும் போட்டோவை வெளியிட்டு தான் எந்தளவுக்கு ஒரு போல்டான பெண் என்பதை ரசிகர்களுக்கு நிரூபித்துள்ளார்.

  மயோசிடிஸ் என்றால் என்ன

  மயோசிடிஸ் என்றால் என்ன

  மயோசிடிஸ் என்றால் தசை அழற்சி நோய் எனப்படுகிறது. இது ஒருவகை அரிதான நோய் என்கின்றனர். பொதுவாக இந்த நோய் எந்த பாலினத்துக்கும், எந்த வயதுடையவருக்கும் வரும் என்கின்றனர். தசை பலவீனம், நடை பயிற்சி செய்யும் போது ரொம்ப சோர்வு ஏற்படுவது, சாப்பிடும் போது விழுங்கவே முடியாத பிரச்சனைகள் தான் இந்த நோய்க்கான முதல் அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  சமந்தாவை காணோம்

  சமந்தாவை காணோம்

  கடந்த 3 மாதங்களாக நடிகை சமந்தா சோஷியல் மீடியாவில் புதிதாக போட்டோக்களை போடவில்லையே, என்ன காரணத்திற்காக தலைமறைவாகி விட்டார் என ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்தன. நெகட்டிவிட்டி காரணமாக சோஷியல் மீடியாவை விட்டே நிரந்தரமாக சமந்தா விலகி விட்டார் என்றும் கூறப்பட்டன. ஆனால், இப்படியொரு நோயால் தான் கடந்த மூன்று மாதங்களாக அவதி பட்டு வந்திருக்கிறார் சமந்தா என்பதை அறிந்த ரசிகர்கள் அவர் சீக்கிரமே குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

  மூச்சு விடக் கூட சிரமம்

  மூச்சு விடக் கூட சிரமம்

  மயோசிடிஸ் நோய் பல வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதில், நடிகை சமந்தா எந்த வகை மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை குறிப்பிடவில்லை. பொதுவாகவே மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களால், சேரில் இருந்து எழுந்து நடக்க முடியாது என்றும், மாடிப் படி ஏறுவதில் சிரமம் உண்டாகும் என்றும், மூச்சு விடவே பெரிய கஷ்டமாக இருக்கும் என்றும் உடல் ரொம்பவே சோர்வாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

  சரி செய்யலாம்

  சரி செய்யலாம்

  மயோசிடிஸ் நோயால் அமெரிக்கர்கள் தான் அதிகப்படியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அரிய நோயாக இருந்தாலும் இதை குணப்படுத்த முடியும். சரியான மருத்துவ சிகிச்சையை செய்து வந்தால், சில மாதங்களில் பூரண குணம் பெறலாம் என்கின்றனர். ஆனால், முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் காலத்துக்கும் சக்கர நாற்காலியில் கிடக்க வேண்டிய அபாயமும் உண்டாகும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நடிகை சமந்தா விரைவில் முழுமையாக குணமாகி வருவார், அதற்கான மனோபலம் அவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Samantha suffers very rare disease called Myositis. She shared about her health condition after several months she gets treatment on that. Here we check What is Myositis and its symptoms.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X