சமந்தாவின் டி-சர்ட்டில் ஆபாச வார்த்தைகள்.. பதறிப்போன ரசிகர்கள்.. குவியும் ட்ரோல்கள்!
சென்னை: ரசிகர்களுக்கு தொடர்ந்து ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா.
தி ஃபேமிலி மேன் தொடரில் படு போல்டாக படுக்கையறை காட்சிகளில் நடித்து மிரட்டிய சமந்தா சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் குத்தாட்ட பாடலுக்கு அரைகுறை ஆடையில் கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது மும்பையில் ஆபாச வார்த்தைகள் அடங்கிய டி சர்ட் உடன் சமந்தா உலாவியது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கணவருடன் விவாகரத்து
கடந்த ஆண்டு இறுதியில் திடீரென நடிகை சமந்தா மற்றும் அவரது கணவரும் நடிகருமான நாக சைதன்யா இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். சினிமாவில் இருவரும் பல எல்லைகளை சென்றடைய பிரிவதாக காரணங்கள் கூறப்பட்டன. நடிகை சமந்தா தற்போது பாலிவுட்டில் புதிய படங்களில் கமீட் ஆகி வருகிறார். சர்வதேச படம் ஒன்றிலும் அவர் ஒப்பந்தமாகி உள்ளார்.

மும்பையில் சமந்தா
அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் மற்றும் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா பாடல் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், ஏகப்பட்ட பாலிவுட் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதன் காரணமாக மும்பையிலேயே சமந்தா சுற்றி வருகிறார்.

டி-சர்ட்டில் ஆபாச வார்த்தைகள்
இந்நிலையில், சலூன் ஒன்றிலிருந்து நடிகை சமந்தா வெளியேறிய நிலையில், அவரை ரசிகர்கள் க்ளிக் செய்த சில புகைப்படங்களில் அவரது டி-சர்ட்டில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அளவுக்கு கெட்ட வார்த்தைகள் அடங்கிய டி-சர்ட்டை ஃபேஷன் எனும் பெயரில் சமந்தா எப்படி அணிந்து கொண்டு உலா வருகிறார் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

குவியும் ட்ரோல்கள்
ஏற்கனவே நடிகை சமந்தாவின் விவாகரத்து பிரச்சனையே பெரிய அளவில் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த டி-சர்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை சமந்தாவை கண்டபடி விளாசி ட்ரோல் செய்து வருகின்றனர்.
Recommended Video

காத்துவாக்குல ரெண்டு காதல்
சமீபத்தில் ஸ்விட்சர்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை சமந்தா அங்கே பனிமலைகளில் ஏறி சாகசங்களை செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்திருந்தார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகி உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. தெலுங்கில் சகுந்தலா படத்தின் ரிலீசுக்கும் காத்திருக்கிறார் சமந்தா.


Click it and Unblock the Notifications











