»   »  சமந்தாவின் செல்ஃபிக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்!

சமந்தாவின் செல்ஃபிக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமந்தாவின் செல்ஃபிக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்!

நடிகை சமந்தா தற்போது ராம்சரண் ஜோடியாக நடித்துள்ள 'ரங்கஸ்தலம்' படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு கிராமத்து விவசாயப் பெண்ணாக அவர் ராம் சரணுடன் நடித்துள்ளார். இந்தப் படம் அமெரிக்காவிலும் ஒரே நாளில் 10 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

Samantha takes selfie in a special place

சமந்தா நடிக்கும் படங்களின் ஷூட்டிங் முடிந்தநிலையில், கணவர் நாக சைதன்யாவுடன் சம்மர் வெகேஷனுக்குச் சென்றுள்ளார் சமந்தா. சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. அவரின் உடைகளின் மீது பலருக்கும் விருப்பம் மிகுந்துள்ளது.

சமீபத்தில் சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதில் அமெரிக்காவில் அவர் தன் கணவர் நாக சைதன்யாவுடன் ஜோடியாக இருக்கிறார். இப்படத்திற்கு 6 லட்சம் லைக்குகள் கடந்துள்ளது.

இந்தப் புகைப்படத்தில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறதாம். இதை சமந்தாவே குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் சென்ட்ரல் பார்க்கில் எடுக்கப்பட்டிருக்கிறது இந்த செல்ஃபி. இதே இடத்தில் தான் 8 வருடத்திற்கு முன்பு இவர்களின் காதல் ஆரம்பித்ததாம். "இந்த மேஜிக்குக்கு நன்றி. இங்கே வந்தது இதற்காக நன்றி சொல்லத்தான்" எனக் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.

காதல் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வந்து நினைவுகளை மீட்டிச் சென்றிருக்கிறார்கள் சமந்தா - சைதன்யா தம்பதியினர். ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சமந்தா நடிப்பில் இன்னும் சில படங்களும் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

    English summary
    Recently Samantha shared a new photo on her Instagram page. This photo has a special memory. Samantha said that their love began in the same place 8 years ago.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    X