இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சமந்தா?.. விரைவில் டும் டும் டும்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டவர். ஆனால் திருமணம் ஆகி சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்தவர்கள் சில காரணங்களால் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறினார்கள். அதற்குப் பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமந்தாவும் அடுத்த திருமணம் செய்துகொள்ள ரெடியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. இங்கு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த அவர் தெலுங்கிலும் தனது கவனத்தை திருப்பினார். அதன்படி கெளதம் இயக்கத்தில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போது அவர்கள் இருவரும் காதல் மலர்ந்தது. சைதன்யாவின் குடும்பம் பாரம்பரியமிக்க மிகப்பெரிய குடும்பம் என்பதால் முதலில் இந்த திருமணத்திற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு நாக சைதன்யா தீவிரமாக இருந்ததன் காரணமாக அவர்கள் குடும்பத்தினர் இந்த காதலை திருமணத்தில் முடிக்க சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர்.

பிரிந்த ஜோடி: திருமணத்திற்கு பிறகும் சமந்தா தனது நடிப்பில் பிஸியாக இருந்தார்.சைதன்யவும் அதற்கு முழுக்க முழுக்க சப்போர்ட் செய்தது தெரிந்தது. ஆனால் ஒருகட்டத்துக்கு மேல் சமந்தா நடிப்பதில் நாகர்ஜுனாவின் குடும்பத்திற்கு விருப்பம் இல்லாமல் போனது. ஆனால் சமந்தா தொடர்ந்து விருப்பப்பட்டதும் பிரச்னையின் முதல் புள்ளி என்று கூறப்பட்டது. பிறகு நாளடைவில் இந்த பிரச்னை பெரிதாக பெரிதாகி அவர்கள் இரண்டு பேரும் பிரியும் நிலைமையை உருவாக்கிவிட்டது.

Samantha to marry director Raj Here are Details

ஜீவனாம்சத்தை வேண்டாம் என்ற சமந்தா: அதனையடுத்து இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அந்த சமயத்தில் சமந்தாவுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் ஜீவனாம்சமாக நாகார்ஜுனா குடும்பம் தருவதற்கு தயாராக இருந்ததாகவும் அதற்கு சமந்தா திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. இதற்கிடையே மையோசிடிஸ் நோயால் சினிமாவில் இருந்து விலகி இருந்தவர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: அதன்படி அவர் நடித்த குஷி, சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும தோல்வியடைந்தன. சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. அதனை ராஜ் மற்றும் டிகே ஆகிய இரண்டு பேர் இணைந்து இயக்கியிருந்தனர். அடுத்ததாக இன்னொரு வெப் சீரிஸில் சமந்தா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க இயக்குனர் ராஜை சமந்தா காதலித்துவருவதாக கூறப்படுகிறது. அவர்கள் இரண்டு பேரும் ஜோடியாக வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர்.

உறுதி செய்த சமந்தா?: ஆனால் அது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் இதுவரை அமைதியாகவே இருந்துவருகிறார்கள். நிலவரம் இப்படி இருக்க ராஜுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து புதிய தொடக்கம் என்று கேப்ஷனை போட்டிருக்கிறார் சமந்தா. ராஜுடன் இருக்கும் காதலை இதன்மூலம் சமந்தா உறுதி செய்துவிட்டதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வதாகவும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X