சாகுந்தலம் படத்திற்கு பிறகு… குழந்தை பெற திட்டமிட்டிருந்தார் சமந்தா… இயக்குனர் பகிர்ந்த தகவல் !

சென்னை : நடிகை சமந்தா சாகுந்தலம் திரைப்படத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்ததாக அப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.

Recommended Video

என் Divorce-கு காரணம்? Samantha Opens Up | வைரலாகும் அதிர்ச்சி தகவல்

7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த நட்சத்திர தம்பதிகள் பிரிந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சோஷியல் மீடியாவில் விவகாரத்துக்கு பல காரணம் கூறிவரும் நிலையில், இதுவரை சமந்தா, நாக சைதன்யா இருவருமே தங்களுடைய விவாகரத்துக்கான காரணம் என்ன என்பதை வெளிப்படுத்தவில்லை.

காதல் திருமணம்

காதல் திருமணம்

நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார். இவர்களது திருமணம் கோவாவில் அனைவரும் வியந்து போகும் அளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். குடும்பத்திலும் நல்ல மருமகள் என்ற பெயர் எடுத்திருந்தார். திருமணத்திற்கு பின் ட்விட்டரில் கணவரின் குடும்பப்பெயரான அக்கினேனியை தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொண்டார்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் தன் பெயரை முழுமையாக நீக்கிவிட்டு ஆங்கில எழுத்தான 'S' என்று மாற்றினார்.சமந்தா தனது பெயரை மாற்றியதுதான் தாமதம் உடனே அனைத்து சோஷியல் மீடியாக்களிலும், சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற செய்திகள் தீயாக பரவின.

இருவரும் பிரிகிறோம்

இருவரும் பிரிகிறோம்

அனைத்து செய்திகளுக்கும் அமைதியாக இருந்த நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா இருவரும் பல உரையாடல்கள் மற்று யோசனைகளுக்கு பிறகு நானும் சாய்யும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம் என்று பதிவிட்டு இருந்தனர்.

வதந்தியை பரப்பாதீர்கள்

வதந்தியை பரப்பாதீர்கள்

சமந்தா, நாக சைதன்யா இருவரின் விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்தா கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

குழந்தை பெற விருப்பம்

குழந்தை பெற விருப்பம்

இந்நிலையில் தற்போது சமந்தா இயக்குனர் நீலிமா குனா இயக்கும் சாகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நீலிமா குணா சமந்தாவிடம் இந்த கதையை நாங்கள் சொன்னபோது அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட்டுக்குள் முடிக்குமாறும், அதற்கு பிறகு தான் குழந்தை பெற விரும்புவதாகவும் கேட்டிருந்தார் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X