For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சுனாமிகளுக்கு மத்தியில் ஒரு மெல்லிய தென்றல்.. மச்சக்கன்னி!

  |

  சென்னை: சரி சரி.. "சிவகார்த்திகேயனுக்கு ஏன் இந்த ஆசை.. விபரீத ஆசை.. இப்பவே ரஜினியாக ஆசைப்பட்டா எப்படி.. பன்ச் டயலாக்கெல்லாம் தேவையா" .. நல்ல கேள்விகள்தான்.. சரியான கேள்விகளும் கூடத்தான்.. ஆனா அத விடுங்கப்பா.. அதை விட சந்தோஷமான விஷயங்கள் படத்தில் எத்தனை இருக்கு தெரியுமா.. அதைப் பத்தி சிலாகித்துப் பேசலாமே.. !

  சீமராஜாதான் இப்போது "டாக் ஆப் தி டங்". நாக்குகளுக்கு மத்தியில் சிக்கி சீமராஜா புரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். இது பொன்ராம் படமே கிடையாது என்றும் சில பொளேர் கருத்துக்கள் இடை இடையே வந்தும் போகின்றன. கரெக்டா சொல்வதாக இருந்தால் பொன்ராம் லைட்டாக குழம்பியிருக்கிறார் என்று தெரிகிறது. இருக்கட்டும்.. யானைக்கும் அடி சறுக்கத்தானே செய்யும்.. பொன்ராமும் லேசாக சறுக்கியிருக்கிறார்.. ஆனால் முழுமையாக விழவில்லை.

  படம் முழுக்க ஏகப்பட்ட சுனாமிகள்... லால் பயமுறுத்துகிறார்.. முன்னாள் இடுப்பழகி சிம்ரன் வெறுப்பழகியாக மாறி வெடுக் வெடுக்கென கடித்துக் குதறுகிறார்.. தடி தடி ஆட்களாக ஏகப்பட்ட பேர் அடி வாங்குகிறார்கள், அடிக்கிறார்கள்.. திடீரென பிளாஷ்பேக்கில் பாகுபலியை மிஞ்சும் காட்சிகள் வருகின்றன.. படம் முழுக்க ஒரே அடிதடிதான்.. ஆனால் அந்த சுனாமிகளுக்கு மத்தியில் ஜிலீரென வந்து போகும் தென்றல்தான் அந்தப் படத்தோட சுவாசமே... மூச்சுத் திணறலின்போது அவ்வப்போது ஆக்சிஜன் மாஸ்க்கை வைப்பது போல இடை இடையே வந்து போகிறாள் இந்த "மச்சக்கன்னி".

  வசீகரிக்கும் அழகு

  வசீகரிக்கும் அழகு

  எந்தப் படத்திலும் இல்லாத அழகுடன்.. சமந்தா வசீகரித்துள்ளார்.. உண்மையிலேயே செம்ம அழகாக வருகிறார் சம்மு!. திருமணத்திற்கு முன்பு இருந்த சமந்தாவை விட இந்த "தி.பி" சமந்தா சிலிர்ப்பூட்டுகிறார். மை இட்ட கண்கள் பேசும் அழகு வசீகரம் என்றால்.. சிந்தும் புன்னகை வளைத்து அள்ளுகிறது நெஞ்சங்களை.

  சும்மா எழுதவில்லை யுகபாரதி

  சும்மா எழுதவில்லை யுகபாரதி

  நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.. ஸாரி.. நம் யுகபாரதி ஒன்றும் சும்மா எழுதலை..

  "இன்ச் இன்ச்சா உன்னை பார்த்து நானும் ஏங்கி போனேனே

  பஞ்சு பஞ்சா என்ன ஆக்கினாலும் சோடி நீதானே

  போற போக்குல போட்டு தாக்குற துண்டு துண்டா ஓடைஞ்சேன்"...

  இது இன்னொரு "இலக்கியம்".. பொட்டு வச்ச.. சொக்கு பொடியும் வச்ச.. கண்ணில் வெடி வச்சு படிய வெச்ச மோகினி.. ஒவ்வொரு வரியிலும் நிதர்சனம் நிரம்பி வழிகிறது பாருங்களேன்!

  நடிப்பு நாயகி

  நடிப்பு நாயகி

  சிவகார்த்திகேயனுடன் மோதும்போது ஒரு அழகு.. கண்ணைச் சுருக்கி உதட்டைச் சுழித்து மிரட்டும் பார்வையில் ஒரு கதம்பம்.. சிலம்பம் சுற்றும்போது ஒரு உருட்டல்.. காதலைச் சொல்லும்போது ஒரு கவிதை.. அந்தக் காதலை முடக்க தந்தை முற்படும்போது காட்டும் ஆதங்கம்.. சிவகார்த்திகேயனை ராமர் வேடத்தில் பார்க்கும்போது அடக்க முடியாமல் பீறிடும் சிரிப்பை தனியாக போய் கொட்டிக் கவிழ்க்கும்போது வரும் நானம்... சித்தி சிம்ரன் நாகப் பாம்பு போல சீறிப் பாயும்போது தந்தையை வெறித்துப் பார்க்கிறாரே அந்த பார்வை... நவரச நாயகியாக மாறி அசத்தியிருக்கிறார் சமந்தா.

  வேடத்திற்கு நியாயம்

  வேடத்திற்கு நியாயம்

  ஏதோ 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலைக்குப் போவது போல அவ்வப்போது, சிவகார்த்திகேயன் வில்லன்களுடன் சண்டை போடப் போய் விடும்போதெல்லாம், சமந்தாதான் பொறுப்பாக, சமத்தாக நமது மனங்களை வசீகரிக்கும் வேலையை சரியாக செய்கிறார்... அவருக்குக் கிடைத்த வேடத்திற்கு நியாயம் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடி என்றால் டக்கென்று ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் இந்தப் படத்தில் அதை மறக்கடிக்க வைத்து விட்டார் சமந்தா (படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு பிட் வேடத்தில் இருந்தும் கூட). அதுவே பெரிய வெற்றிதான்.

  ஒரு படத்துக்கு ஒரு பாடல் பதம்

  ஒரு படத்துக்கு ஒரு பாடல் பதம் என்பது போல இந்தப் பாட்டை மட்டும் பார்த்துட்டே கேட்டு ரசித்தால்... நீங்களும் ஒரு சமந்தா ரசிகர்தான்!

  சூப்பர் தோழி!

  சூப்பர் தோழி!

  அப்புறம், இன்னொரு முக்கியமான விஷயம்.. சமந்தாவின் தோழியாக வர்றாரே.. அவர் சம்முவை விட செம்ம.. தமிழ்த் திரையுலகின் "தோழிகள்" வரலாற்றில் அவருக்கென்று ஒரு தனி இடம் காத்திருக்கிறது..!

  English summary
  Samantha has enthralled the audience in Seemaraja with her stunning performance.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X