»   »  சமீராவால் 'பிழைத்த' பத்மா!

சமீராவால் 'பிழைத்த' பத்மா!

Subscribe to Oneindia Tamil
Sameera Reddy
சமீரா ரெட்டி நடிக்க மறுத்ததால்தான் அர்ஜூனுடன் துரை படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் பத்மப்ரியா.

கவர்ச்சி காட்டுவதில், தனக்கென தனி இலக்கம் வகுத்துள்ள சமீரா ரெட்டிக்கு தமிழ் சினிமாவில் புது கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவரை தங்களது படத்தில் நடிக்க வைக்க பலரும் அலை மோதுகிறார்களாம்.

இந்தியில் கலக்கிக் கொண்டிருப்பவர்தான் சமீரா ரெட்டி. இப்போது அவரை தனது வாரணம் ஆயிரம் படத்துக்காக தமிழுக்குக் கூட்டி வந்துள்ளார் கெளதம் மேனன்.

சூர்யாவுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கும் சமீரா, இப்படத்திலும் கிளாமரில் விளையாடியுள்ளாராம். கதைப்படி சமீரா உள்ளிட்ட 2 ஹீரோயின்களையும் ஹீரோ சூர்யா துரத்தித் துரத்திக் காதலிக்கிறாராம்.

விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் வாரணம் ஆயிரம் படத்தை தமிழில் தனக்கு சரியான பிளாட்பாரமாக கருதும் சமீரா ரெட்டி தமிழில் தொடர்ந்து அதிகப் படங்களில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளாராம்.

இருப்பினும் பை நிறைய அட்வான்ஸ்களை வாங்கிப் போட்டுக் கொள்ள அவருக்கு விருப்பமில்லையாம். வாரணம் ஆயிரத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்திற்குப் போகப் போகிறாராம்.

சமீபத்தில் கூட இவரைத் தேடி அர்ஜூன் பட வாய்ப்பு வந்தது. அர்ஜூன் நடிக்கவுள்ள துரை படத்தில் சமீராவைத்தான் நாயகியாக்க முதலில் தீர்மானித்திருந்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ அந்தப் படத்தை சமீரா ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்தே பத்மப்பிரியாவைப் பிடித்து நாயகியாக்கியுள்ளனர்.

சமீரா இடத்தைப் பிடித்து விட்டார் பத்மப்ரியா. ஆனால் அவர் அளவுக்கு கலக்குவாரா?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil