»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

வரும் 21ம் தேதி நடைபெறும் நடிகை சம்யுக்த வர்மாவின் திருமணத்தை "ஏசியாநெட்" என்ற மலையாள டி.வி. சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மலையாளத் திரையுலகில் பிரபலமான சம்யுக்த வர்மா, சமீபத்தில் "தென்காசிப் பட்டணம்" மூலம் தமிழில் அறிமுகமானார்.

படப்பிடிப்புக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த சம்யுக்த வர்மாவை தீவிரவாதி எனக் கருதி போலீசார் அவரை தாக்கிய சம்பவம் திரையுலகில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும் நினைவிருக்கலாம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இவரும் பிரபல மலையாள நடிகரான பிஜு மேனனும் தீவிரமாகக் காதலித்து வருகின்றனர்.

வரும் 21ம் தேதி சம்யுக்த வர்மா - பிஜு மேனன் திருமணம் கேரளாவின் திருச்சூரில் நடைபெறவுள்ளது.

இவர்களுடைய திருமணத்தை "ஏசியாநெட்" டி.வி. நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. இந்த ஒளிபரப்பை ஸ்பான்ஸர் செய்வதற்கும் ஒரு பிரபலமான வர்த்தகநிறுவனம் முன் வந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை எந்த நடிகையின் திருமணமும் டி.வியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil