»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்து மைனா சம்யுக்த வர்மா இப்போது அதிக தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தென்காசிப் பட்டணம் தான் எனது முதல் மற்றும் கடைசிப் படம் என்று கூறி வந்த வர்மாவின் முடிவு மாறியது ஏன்? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் ...

சம்யுக்த வர்மாவும், மலையாள நடிகர் பிஜூ மேனனும் காதலர்கள். இருவருக்கும் கல்யாணம் கூட முடிவு செய்து விட்டார்கள். இந்த நிலையில் திடீரெனபிஜூவின் குடும்பத்தினர் திருமணத்தை கொஞ்ச நாள் கழித்துப் பண்ணலாம் என்று கூறி விட்டார்களாம்.

இதனால் சம்யுக்த வர்மா ஏமாற்றமடைந்துள்ளார். சரி, கல்யாணம் வரை படங்களில் நடிக்கலாமே என்று நினைத்தால் மலையாளத்தில் வாய்ப்புகள்குறைந்து போய் விட்டன.

என்ன செய்யலாம் என்று யோசித்த சம்யுக்தாவின் மனதில் தமிழ் திரையுலகம் கண்ணடித்துக் கூப்பிட்டுள்ளது ( ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில்ஆண்டிதானே).

ஆனால் தென் காசிப் பட்டணத்துக்குப் பிறகு தமிழில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டு இப்போது மீண்டும் நடிக்க நினைத்தால் யார் கூப்பிடுவார்கள்என்று யோசித்துள்ளார்.

ஆனால் அந்த யோசனையை அடுத்த விநாடியே துடைத்தெறிந்து விட்டு பி.ஆர்.ஓக்கள் மூலம் பல தயாரிப்பாளர்களுக்கும், டைரக்டர்களுக்கும் ஓலைஅனுப்பினார்.

அதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது. சில படங்கள் உடனடியாக புக் ஆகிவிட்டன.

முன்பு, தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் யாருமே இல்லை என்று கூறியவர் சம்யுக்தா வர்மா என்பது உங்களுக்குத் தெரிம் தானே?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil