அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை...வாயை பிளக்கும் ரசிகர்கள்...காரணம் இவர் தானா
சென்னை : தமிழ், தெலுங்கு படங்கள் பலவற்றில் சிறிய ரோல்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சனா நடராஜன். தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பெரும்பாலும் ஹீரோ அல்லது ஹீரோயினின் ஃபிரண்டாக வருவார்.
இறுதிச்சுற்று, நோட்டா, 2.0, கேம் ஒவர் உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சனா நடராஜனுக்கு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் ரக்கிட்ட ரக்கிட்ட பாடலுக்கு தனுஷுடன் சேர்ந்து நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சார்பட்டா பரம்பரை நடிகை
இதைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் லட்சமி கேரக்டரில் சிறப்பாக நடித்து, அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். முன்னதாக தமிழ், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான நோட்டா படத்தில் இளம் பெண் அரசியல்வாதியாக நடித்து, தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார்.

தனுஷுக்கு ஜோடி
ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த பிறகு பிரபலமான நடிகையாகிவிட்ட சஞ்சனாவிற்கு தற்பொது அதிக அளவில் பட வாய்ப்புக்கள் வந்து கொண்டிருக்கிறது. படங்களில் மட்டுமல்ல வெப் சீரிஸ், குறும்படங்கள் என பலவற்றிலும் நடித்து வருகிறார் சஞ்சனா.

அலை சறுக்கு பயிற்சி
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அலை சறுக்கு பயிற்சி பெறும் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் வாயடைத்து போக வைத்துள்ளார் சஞ்சனா. அலை சறுக்கு பயிற்சி பள்ளியில் இணைந்து இந்த பயிற்சியை அவர் மேற்கொண்டு வருகிறாராம்.

இவர் தான் காரணம்
இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனில், புதியதாக எதையாவது முதல் முறை செய்யும் போது ஏற்படும் சந்தோஷம் ஒப்பிட்டு கூற முடியாதது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த பயிற்சிக்காக தன்னை ஊக்கப்படுத்திய நடிகர் ஷபீருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

அவர் தான் இவர்
இந்த ஷபீர் வேறு யாருமில்லை. சார்பட்டா பரம்பரை படத்தில் புகழ்பெற்ற டான்சிங் ரோஸ் கேரக்டரில் நடித்த ஷபீர் கல்லரக்கல் தான். இவர் பேட்ட, டெடி, அடங்கமறு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சஞ்சனா நடிகையாக அறிமுகமான நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் தான் ஷபீரும் ஹீரோவாக அறிமுகமானார்.


Click it and Unblock the Notifications











