»   »  சந்தியாவுக்கு டிசி கொடுத்த ஸ்கூல்!

சந்தியாவுக்கு டிசி கொடுத்த ஸ்கூல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் படத்தின் ஹீரோயின் சந்தியாவை அவரது பள்ளி டிசி கொடுத்து வெளியில் அனுப்பி விட்டதாம்.

ஷங்கரின் சிஷ்யர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் காதல் படத்தின் நாயகியாகநடித்தவர் சந்தியா. சென்னை நுங்கம்பாக்கம் வித்யோதயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

காதல் படத்தில் நடிப்பதற்காக லீவு போட்டு விட்டு நடித்துக் கொடுத்தார். காதலில் கிடைத்த வெற்றியால் இப்போது ஏகப்பட்ட படவாய்ப்புகள். இதனால் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துள்ள அவர் பள்ளிக் கூடம் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

ஒரேயடியாக மிக நீண்ட விடுப்பில் சந்தியா போனதால், பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியிலிருந்து நீக்க முடிவு செய்து அதிகாரிகளுடன்பேசியதாம். இதைத் தொடர்ந்து தற்போது பள்ளியிலிருந்து சந்தியா நீக்கப்பட்டு விட்டார்.

படிப்புப் பள்ளியில் தான் தேற முடியாவிட்டாலும் முதல் படத்திலேயே நடிப்புப் பள்ளியில் தேறிவிட்டாரே சந்தியா.

சந்தியாவின் இயற்பெயர் ரேவதி. நீண்ட காலத்துக்கு முன்பே கேரளத்தில் இருந்து சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்ட மலையாளகுடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சந்தியா.

சந்தியாவின் அப்பா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேஷியர். அம்மா பெயர் மாயா, பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். மகளைமாடலிங்குக்கு அனுப்புவதில் தீவிரமாக இருந்தவர் மாயா. ஆனால், சந்தியாவோ பேஷன் டிசைனராகும் ஆசையில் இருந்துள்ளார்.

ஆனால், இவர்களது குடும்ப நண்பரான மனோஜ் கிருஷ்ணா என்பவர் சந்தியாவை மாடலிங்கு இழுத்து வர முயன்று அவரை வைத்துபோட்டோ செஷன் நடத்தியுள்ளார். சில படங்களை ஷங்கரின் பார்வைக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

பாலாஜி சக்திவேலும் ஷங்கரும் காதல் படத்துக்கு ஹீரோயின் தேடியபோது இந்த ஸ்டில்கள் கண்ணில் பட ஷங்கர், சந்தியாவின் வீட்டுக்கேபோய் பேசி நடிக்க அழைத்து வந்திருக்கிறார்.

முதல் படத்திலேயே உச்சத்துக்கும் போய்விட்டார் சந்தியா.

ஸ்கூலை விட்டு தூக்கிவிட்டார்களே படிப்பு அம்புட்டு தானா என்று சந்தியா தரப்பில் கேட்டோம். இனிமே தனியாகவே எஸ்எஸ்எல்சிபடித்து பரிட்சை எழுதுவார் சந்தியா, தொடர்ந்தும் படிப்பார் என்று பதில் கிடைத்தது.

சரி சந்தியா புராணமாவே இருக்கே.. கூட நடித்த பரத் பத்தி ஒரு பத்தி நியூசாவது போடக் கூடாதா என்கிறீர்களா?.. போட்டுட்டா போச்சு...

காதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது சம்பளத்தை ரூ. 30 லட்சமாக உயர்த்திவிட்டார் பரத்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil