»   »  ஜில் ஜில் சந்தியா

ஜில் ஜில் சந்தியா

Subscribe to Oneindia Tamil

இதுவரை இல்லாத அளவுக்கு படு அழகாக, ஜிலு ஜிலுவென காட்சி தருகிறார் சந்தியா. எல்லாம் மஞ்சள் வெயில் படுத்தும் பாடுதான்.

காதல் மூலம் படு வேகமாக கிளம்பி வந்த சந்தியா, அதன் பின்னர் சின்ன கேப் கொடுத்து அவ்வப்போது தலையைக் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான கூடல் நகரில் அசத்தலாக நடித்திருந்த சந்தியா இப்போது மஞ்சள் வெயில், இது மாலை நேரத்து மயக்கம் என இரு படங்களில் அசத்தி வருகிறார்.

மஞ்சள் வெயில் ஸ்டில்களைப் பார்த்தால் இதுவரை இல்லாத ஒரு அழகு அவரிடம் மிளிர்வதை உணரலாம். தர்பூசணி பழம் அளவுக்கு தத்தக்கா புத்தக்கா என்று இருந்தவர் இப்போது கிர்ணி பழம் அளவுக்கு கொஞ்சம் போல மெலிந்து களையாக மாறியிருக்கிறார்.

ராஜா இயக்கத்தில், சத்தம் போடாதே படத்தின் தயாரிப்பாளர் சையத் தயாரிக்கும் படம்தான் மஞ்சள் வெயில். பிரசன்னா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடி போடுகிறார் சந்தியா. இருவரும் இணையும் முதல் படம்.

வல்லவன் படத்தில் நடித்ததால் சில படங்களை இழந்தார் சந்தியா. காரணம், சிம்பு ஜவ்வாக இழுத்து ஷூட்டிங் நடத்தியதால். வல்லவனை முடித்த கையோடு வேகம் வேகமாக கூடல் நகரை முடித்துக் கொடுத்தார் சந்தியா.

அந்தப் படத்தின் ஓப்பனிங் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதால், சந்தோஷமாகியுள்ள சந்தியா, தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்ளில் நடிக்க ஆர்வமாக உள்ளார். அந்த வரிசையில் ஒப்புக் கொண்ட படம்தான் மஞ்சள் வெயில்.

வெயிலில் பல வகை. காலையில் இள வெயில், மாலையில் மயக்கும் மஞ்சள் வெயில், நடுப்புறத்தில் கொளுத்தும் வெள்ளை வெயில். மஞ்சள் வெயில் என்ற பெயரை வைத்து விட்டு சந்தியா மயக்காமல் இருந்து விடுவாரா என்ன.

புத்தம் புதிய பொலிவுடன் பளபளப்பாக படம் முழுக்க வருகிறாராம் சந்தியா. காதல் படத்திற்குப் பிறகு இப்படத்திலும் அவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பாம். லேசு பாசாக கிளாமர் பக்கமும் தலை சாய்த்துள்ளாராம்.

நல்ல கதை ஜெயிக்கும், இந்த மஞ்சள் வெயிலும் ஜொலிக்கும் என்று இயக்குநர் ராஜாவும் நம்பிக்கையோடு பேசுகிறார். சந்தியாவின் சின்னச் சிரிப்பிலேயே பாதிப் படம் ஜெயிச்சது போலத்தான் ராசா என்று அவருக்கு மேலும் தன்னம்பிக்கை ஊட்டினோம்.

இந்த ராஜா வேறு யாருமல்ல, இயக்குநர் அதியமானின் உதவியாளராக இருந்தவர். இந்தப் படம் காதலுக்கும், உண்மையான காதலர்களுக்குமான அைடயாளம் என்கிறார் ராஜா.

பரத்வாஜ் இசையமைக்கிறார். அனந்தகுமார் கேமராவைக் கையாள, பா. விஜய் பாடல்களைப் புனைகிறார்.

மஞ்சள் வெயிலைப் போலவே, இது மாலை நேரத்து மயக்கம் படத்தையும் அதிகம் நம்பியுள்ளாராம் சந்தியா. அப்படத்தை இயக்கப் போவது செல்வராகவன். கூட ஜோடி போடுவது பருத்தி வீரன் கார்த்தி.

வெயிலோ மஞ்சள், சந்தியாவோ ஜில் ஜில்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil