»   »  வீடு கட்டும் சந்தியா

வீடு கட்டும் சந்தியா

Subscribe to Oneindia Tamil


ஃபிளாட்டிலிருந்து விரைவில் தனி வீட்டுக்குப் போகப் போகிறார் சந்தியா. காரணம், சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்துள்ளாராம்.

கேரளத்து நடிகைகள் எல்லாம் பெரும்பாலும் ஃபிளாட்டிலும், ஹோட்டல்களிலும்தான் வாசம் புரிகிறார்கள். சொந்தமாக தனி வீடு வைத்திருப்பவர்கள் ரொம்பவே சொற்பம்தான். காரணம், வருமானத்தை மட்டும் வாரிக் கொண்டு சொந்த ஊருக்குப் போய் விடும் மன நிலையில் இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

சந்தியாவும் சேச்சிதான். ஆனால் அவர் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் நிரந்தரமாக இங்கேயேதான் குடியிருக்கிறார். ஆனால் சந்தியா தற்போது குடும்பத்துடன் சாலிகிராமம் பகுதியில் ஃபிளாட்டில்தான் இருக்கிறார்.

காதல் படத்தில் நடித்து பிரபலமானதால், சீக்கிரமே தனி வீடு கட்டிப் போய் விட வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். அதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு.

சந்தியாவுக்கு நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியமாம் (நாய் ஆசை இல்லாத நடிகை ஏது?). ஆனால் ஃபிளாட்டில் நாய் வளர்க்க அனுமதி கிடையாது. அதையும் மீறி வீட்டுக்குள்ளேயே ஒரு நாய்க் குட்டியை பொத்திப் பொத்தி வளர்த்து வந்தாராம் சந்தியா. ஆனால் குடித்தனக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து நாயா, நீங்களா முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சண்டைக்கு வந்து விட்டார்களாம்.

இந்த ஒரு காரணத்துக்காகவே தனியாக வீடு கட்டிக் கொண்டு போக வெறியாக இருந்தாராம் சந்தியா. அவரது சபதம் இப்போது நிறைவேறப் போகிறது. வடபழனிக்குப் பக்கத்தில் இருக்கும் சாலிகிராமத்திலேயே 2 கிரவுண்டு நிலம் நல்ல விலைக்கு வந்ததாம். அதை வாங்கிப் போட்டு விட்ட சந்தியா, அந்த இடத்தில் தனது கனவு இல்லத்தைக் கட்டத் தொடங்கியுள்ளார்.

மகள் கூறும் யோசனைப்படி அந்த வீட்டை இழைத்து இழைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறாராம் அவரது அப்பா. விரைவில் வீட்டு வேலை முடிந்ததும் குடும்பத்தோடு பால் காய்ச்சிக் கொண்டு குடித்தனம் புகப் போகிறார் சந்தியா.

அங்கு போன பின்னர் ஒன்றுக்கு பத்து நாய்களாக வளர்க்கத் திட்டமாம்.

Read more about: own house, saligramam, sandhya, vadapalani
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil