»   »  'லிப் டு லிப்' முத்தம் தப்பில்லை-சந்தியா

'லிப் டு லிப்' முத்தம் தப்பில்லை-சந்தியா

Subscribe to Oneindia Tamil
Shaam with Sandhya
கதைக்குத் தேவையென்றால் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுப்பதில் தப்பே இல்லை என்கிறார் குடும்ப குத்துவிளக்காக இதுவரை வந்து போய்க்கொண்டிருந்த சந்தியா.

கவர்ச்சியா நடிக்கணுமா...ம்ஹூம் இப்பவே கேரளாவுக்கு மூட்டை கட்டிக்குவேன் என்று கவர்ச்சிக்கு எதிராக கொடி பிடித்து வந்த சந்தியா ஏன் திடீரென்று இப்படி என்றுதானே கேட்கிறீர்கள்.

'பசி வந்தா பத்தும் பறந்து போகும்' என்பார்களே. அப்படித்தான். தொடர் தோல்விகளால் வாய்ப்புகள் ரொம்பவே குறைந்து போக ஆரம்பித்துவிட்டதால் கவர்ச்சி குறித்த தன் கொள்கைகளையும் தளர்த்திக் கொண்டிருக்கிறார் நல்ல நடிகையான சந்தியா.

அதைச் செயலிலும் காட்டும் வகையில் சமீபத்தில் தூண்டில் படத்துக்காக உதட்டோது உதடு பதிக்கும் முத்தக் காட்சி ஒன்றில் இயல்பாக நடித்துக் கொடுத்து அசத்தினாராம்.

பொதுவாக நடிகைகளை சற்றே வாரிவிடும் இயக்குநர் அதியமானே, 'அட பொண்ணு பரவால்லப்பா, பொழச்சுக்கும்' என்று சான்றிதழ் தருமளவுக்கு காட்சிகளிலும் தாராளம் காட்டியுள்ளாராம் சந்தியா.

இதுகுறித்து சந்தியாவிடம் கேட்டால், "கவர்ச்சி என்பது காட்சி மற்றும் கதையைப் பொருத்தது. தூண்டில் படத்தில் அந்த முத்தக் காட்சி மிகவும் அவசியமாக இருந்த்து. அதை உணர்ந்த்ததும் என் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டேன். இனி வரும் படங்களிலும் இப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை, கதை சிறப்பாக அமையும் பட்சத்தில்..." என்றார்.

சந்தியா பற்றி கூடுதல் செய்தி... மலையாளப் படம் ஒன்றில் அம்மணி வில்லியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். டி-17 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் அதுல் குல்கர்னி. ஆனால் தமிழில் வில்லியாக நடிக்க மாட்டாராம் சந்தியா.

பாவம் தமிழ் ரசிகர்கள் என்று பெருந்தன்மையாக விட்டுவிட்டார் போலிருக்கிறது!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil