»   »  யாரையும் காதலிக்கவில்லை - சந்தியா

யாரையும் காதலிக்கவில்லை - சந்தியா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sandhya with Prithiviraj

நான் யாரையும் காதலிக்கவில்லை. மலையாள நடிகர் பிருத்விராஜுடன் காதல் என்று வரும் செய்திகள் எல்லாம் டூப் என்று கூறியுள்ளார் 'காதல்' சந்தியா.

காதல் நாயகி சந்தியா, படு நிதானமாக கோலிவுட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைத்து வருகிறார். செலக்டிவான ரோல்களில் மட்டும் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக கண்ணாமூச்சி ஏனடா படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மூண்டதாக செய்திகள் வெளியானது. இருவரும் சேர்ந்தே சுற்றிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.

இதுகுறித்து இருவருமே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஜஸ்ட் பிரண்ட்ஷிப் என்று மட்டும் கூறி வந்தார் சந்தியா. இந்த நிலையில் முதல் முறையாக காதல் எல்லாம் கிடையாது என்று மறுத்துள்ளார் சந்தியா.

பிருத்விராஜுடன் நட்பு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு சந்தியா பொறிந்து தள்ளியுள்ளார். நான் நடிக்கும் எல்லா கதாநாயகர்களுடனும் சேர்த்து கிசு கிசு செய்தி வருவது வழக்கமாகி விட்டது. இதெல்லாம் எதுவும் உண்மை கிடையாது. நான் யாரையும் காதலிக்கவில்லை என கூறுகிறார் சந்தியா.

சந்தியா சொன்னால் சரியாகத்தான் இருக்கும், நம்புவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil