»   »  'காதல்' சந்தியா ரிட்டர்ன்ஸ்: டோலிவுட்டில்...

'காதல்' சந்தியா ரிட்டர்ன்ஸ்: டோலிவுட்டில்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சந்தியா பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துள்ளார்.

2004ம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சந்தியாவின் காதல் படம் ரிலீஸானது. அந்த படம் பட்டிதொட்டி எல்லாம் ஹிட்டானது. பள்ளிக்கூடப் பெண்ணா பரவாயில்லையே, நன்றாக நடித்திருக்கிறாரே என்று அனைவரும் சந்தியாவை பாராட்டினர்.

இந்த பொண்ணுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது என்று பலர் கூறினர்.

ஏதோ

ஏதோ

காதல் படத்தை அடுத்து சந்தியா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடிக்கத் துவங்கினார். அவர் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மார்க்கெட்

மார்க்கெட்

கோலிவுட்டில் சந்தியாவின் மார்க்கெட் சரியாக இல்லை. அதனால் அவர் நகைச்சுவை நடிகரான சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். மவுசு இல்லாததால் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

தெலுங்கு

தெலுங்கு

சந்தியா நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான படம் ஹாசினி. அதை அடுத்து அவர் தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகள் கழித்து அவர் தற்பபோது எவாத்ரா ஹீரோ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

எவாத்ரா ஹீரோ படத்தை எஸ்பிகே பிலிம்ஸ் கார்பரேஷன் சார்பில் எஸ்.கே. கரீமுன்னிஸா தயாரித்துள்ளார். ராம்தேவ் பட புகழ் எஸ்.கே. பாசீத் ஹீரோவாக நடித்துள்ளார். படப்பிடிப்பு பாங்காக், துபாய், ஹைதராபாத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பிரம்மானந்தம்

பிரம்மானந்தம்

படத்தில் பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் நடித்துள்ளார். கப்பார் சிங்காக வரும் அவரின் நடிப்பை பார்த்து மக்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தியா

சந்தியா

சந்தியா தற்போது தமிழில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் 5 படங்களிலும் நடித்து வருகிறார். அவர் மல்லுவுட்டில் தான் அதிக பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
'Kadhal' Sandhya is back in Tollywood via Evadra hero. She has returned to Tollywood after 5 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil