»   »  ஷங்கரின் காதலில் சந்தியா

ஷங்கரின் காதலில் சந்தியா

Subscribe to Oneindia Tamil

ஷங்கர் தனது புதிய படத்தில் சந்தியா என்ற கேரளத்து அழகுக் கிளியை அறிமுகப்படுத்துகிறார்.

சந்தியாவைப் பார்த்தால் பரவசப்பட மாட்டீர்கள், துள்ளல் போட மாட்டீர்கள். ஆனாலும் உங்களுக்கு ரொம்பவேபிடித்துப் போகும் என்கிறார் ஷங்கர். அவர் சொல்வது மாதிரியே, பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி படு இயல்பாகஇருக்கிறார் சந்தியா.

ஷங்கரின் புதிய படம் என்றதும் அன்னியனுக்கு அடுத்ததாக இயக்கப் போகும் படம் என்று நினைக்காதீர்கள். இதுஷங்கர் தயாரிக்க அவரது சீடர் பாலாஜி சக்திவேல் இயக்கும் படம். பெயர் காதல்.

முதல்வன் படத்துக்கு அடுத்த ஷங்கர் தனது எஸ் பிலிம்ஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். சாமுராய்படத்தையடுத்து பாலாஜி சக்திவேல் இயக்கும் படம் இது. ஹீரோவாக பாய்ஸ் படத்தில் நடித்த பரத் நடிக்கிறார்.இப்போது இவர் 4 ஸ்டூடண்ட்ஸ் என்ற மலையாள ரீமேக் படத்திலும் நடித்து வருகிறார்.

கதாநாயகியாக கேரளாவைச் சேர்ந்த சந்தியா அறிமுகமாகிறார். பார்ப்பதற்கு +2 மாணவி மாதிரி படுஹோம்லியாக இருக்கிறார். சின்னப் பொண்ணாச்சே என்ற நினைத்தால் காதல் காட்சிகளில் புகுந்துவிளையாடுகிறாராம்.

அழுக்கைக்கு அழுகை, கோபத்துக்கு கோபம், சாந்தத்துக்கு சாந்தம், காமத்துக்கு காமம் என எல்லா ரோல்களிலும்கலக்கி வருகிறாராம் சந்திரா. நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு எதார்த்தமான ஹீரோயின் கிடைத்துள்ளார் என்கிறதுசூட்டிங் யூனிட்.

இவர்களோடு அலெக்ஸ், சரண்யா, ஜெயதுர்கா, கெளசல்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். காதல் என்பது எங்குஆரம்பித்து எங்கு முடிகிறது என்பதை யதார்த்தமாக சற்று சமூக அக்கறையோடு காட்டப் போகிறார்களாம்.

இந்த யதார்த்தம் காரணாகவே இயக்குநர் பாலாஜி ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ளவிருந்தார். கதையில் ஒரு காட்சி.மதுரைப் பக்கம் இருக்கிற ஒரு விசேஷ வீட்டில் கறிச்சோறு விருந்தின் போது இரண்டு தாய்மாமன்களுக்குஇடையே சண்டை வந்துவிடுகிறது.

இதை யதார்த்தமாக எடுக்க விரும்பிய பாலாஜி மதுரைக்குச் சென்றுள்ளார். அந்தளவுக்கு யதார்த்தத்தோடு அவர்நிறுத்தியிருக்க வேண்டும். இன்னும் ஆசைப்பட்டு நடிகர்களுக்குப் பதில் உள்ளூர்காரர்களையே அடிதடிகாட்சிக்கு பயன்படுத்தியிருக்கிறார்.

ஸ்டார்ட் கேமரா சொல்லியதும் இரண்டு தாய் மாமன்களும் அடித்துக் கொள்ளத் தொடங்கினர். ஒரு கட்டத்தில்உணர்ச்சி வயப்பட்டு இரண்டு பேரும் உண்மையாகவே அடித்துக் கொண்டு கைக்குக் கிடைத்த சோற்றுப் பானை,கரண்டிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் எறிந்து ஆவேசமாக மோதியுள்ளனர்.

பயந்துபோன பாலாஜி தடுக்க முயற்சிக்க, அவருக்கும் இரண்டு போடு போட்டிருக்கின்றனர். கடைசியில்அவர்களாகவே ஆவேசம் தணிந்து அவர்களாகவே வந்து, நடிப்பு யதார்த்தமா இருந்திருச்சா தம்பி என்றுகேட்டார்களாம்.

குலை நடுங்கிப் போன பாலாஜியும் பயத்தில் கை, கால் நடுங்கிய சந்தியா உள்ளிட்ட நடிகை, நடிகர்கள்பட்டாளமும் உடனே சூட்டிங்கை நிறுத்துவிட்டு பேக்-அப் செய்து கொண்டு ஓடி வந்துள்ளது.

இந்த ஒரிஜினல் சண்டையை பார்க்க விரும்புவர்கள் ஒரு மாதம் பொறுத்திருக்கவும். படம் அடுத்த மாதம் திரைக்குவருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil