»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத்துடன் அமராவதியில் அறிமுகமானவர் சங்கவி. கிக்கான உடலால் நெஞ்சங்களை அள்ளினார். அமராவதிநன்றாக ஓடியது

அஜீத்துக்கு அந்தப் படம் பெயர் வாங்கித் தந்தது. சங்கவியின் திரை வாழ்வு, அமராவதியின் வெற்றி மூலம்பிரகாசமடையத் தொடங்கியது.

அஜீத்துடன் அறிமுகமான அவர் பின்னர் விஜய்யின் நிரந்தர நாயகி என்ற அளவுக்கு வளரத் தொடங்கினார்.தொடர்ந்து விஜய் படங்களாக நடித்து வந்த அவர் அதன் பிறகு பிரசாந்த் போன்றவர்களுடன் நடித்தார்.

இளம் ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்து வந்த சங்கவி அதன் பிறகு திடீரென காணாமல் போனார்.தமிழில் வாய்ப்புகள் வராததால் நொந்து போயிருந்த அவரை தெலுங்குப் படவுலகம் இரு கை நீட்டி வரவேற்றது.

இதனால் தெலுங்குப் பக்கம் ஒதுங்கிய சங்கவி கவர்ச்சியை அள்ளி வீசி முன்னணி நாயகி அந்தஸ்தை அடைந்தார்.முன்னணி நாயகர்களுடன் நடித்து வந்த அவருக்கு அங்கு இளம் நடிகைகளின் வரவு போட்டியாக அமையவாய்ப்புகள் இல்லாமல் முடங்கினார்.

உடனே கை கொடுத்தது அவரது தாய் மொழியான கன்னடம். கன்னடத்தில் நடித்து வந்தாலும் கூட பெரியஅளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் பாதி நேரம் தனது சொந்த ஊரான மைசூரிலேயே நொந்துபோய் உட்கார்ந்து இருந்த அவருக்கு அடித்தது சூப்பர் சான்ஸ்.

தனது பஞ்சதந்திரம் படத்தில் ஒரு நாயகியாக நடிக்க கமல் அழைக்கவுடனே சென்னைக்கு ஓடி வந்தார் சங்கவி.

இந்த சான்ஸ் கிடைத்ததற்காக ஏக மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த சங்கவிக்கு அடித்தது இன்னொரு யோகம். தனதுபாபா படத்தில் நடிக்க சங்கவியை புக் செய்தார் ரஜினி காந்த்.

இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இன்னும் ஒரு ரவுண்ட் உப்பியிருக்கிறார் சங்கவி.

இளம் ஹீரோக்களுடன் அறிமுகமாகி, இடையில் காணாமல் போய் இன்று சூப்பர் ஸ்டார்களின் படங்களில் நடித்துசான்ஸ் கிடைத்திருக்கிறது.

சங்கவிக்கு உதட்டில் மட்டும் அல்ல, உடம்பெல்லாம் மச்சம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil