»   »  எப்படி இருந்த சங்கவி...

எப்படி இருந்த சங்கவி...

Subscribe to Oneindia Tamil


சங்கவியின் நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டது. ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சங்கவி, இப்போது சத்யராஜூக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம்.

கையில் படங்களே இல்லாமல் போனதால் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் சினிமா ஆட்களுடன் போய்ச் சேர்ந்தார் சங்கவி. அவர்களுடன் வெளிநாடுகளுக்குப் பறந்து போய் ஸ்டேஜ் டான்ஸ் மற்றும் கலைச் சேவைகள் மூலம் பணம் பார்த்து வந்தார்.

உள் நாட்டில் இருக்கும் நேரத்தில் சென்னை, ஹைதராபாத், சொந்த மாநிலமான கர்நாடகத்தில் சினிமாவுக்கு வாய்ப்புத் தேடிக் கொண்ட இருந்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் சுத்தமாக சான்ஸ் இல்லாமல் போகவே சொந்த ஊரான மைசூருக்கே போய்விட்டார். பின்னர் மனதைத் தேற்றிக் கொண்டு பெங்களூர் வந்து புரபஷசனல் போட்டோகிராபர்களை வைதது தனக்குத் தானே கவர்ச்சியான போட்டோ செஷன் நடத்தி பளிச் பளிச் போஸ்களை எடுத்து ரவுண்டில் விட்டார்.

இதற்குப் பலன் கிடைத்தது. சுள்ளான் படத்தில் தனுசுடன் ஒரு குண்டாங்குதிர ஆட்டம் போட வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக இவரது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூனும் தனது அடுத்த படத்தில் ஒரு வாய்ப்பை அள்ளித் தந்தார்.


இதைத் தொடர்ந்து கிடைத்த சான்ஸ் தான் சத்யராஜூக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு.

மங்கை, கோகுலம் வீடு, எங்க குடும்பம் ஆகிய மெகா அழுவாச்சி சீரியல்கள் மூலம் தமிழர்களின் சாயங்காலத்து துக்கத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்த அரிராஜன் இப்போது சினிமா எடுக்க வந்துள்ளார்.

அவர் இயக்கி வரும் அந்தப் படத்தின் பெயர் அய்யர் ஐ.பி.எஸ் ஹீரோ சத்யராஜ். இரட்டை வேடமாம்.

இதில் தாதா வேடத்தில் நடிக்கும் இளம் சத்யராஜூக்கு (அய்யய்ய்ய..) ஜோடியாக வங்காளத்தைச் சேர்ந்த ரிங்கு என்ற இளம் நடிகையை பிடித்து வந்திருக்கிறார்கள். இவரும் மும்பையில் மாடலாம் (அடாடாடாடா... இந்த மாடல்கள் தொல்ல தாங்கலப்பா)

கொஞ்சம் ஓல்டு கெட்-அப்பில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சத்யராஜூக்கு ஜோடியாக சங்கவியை புக் செய்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. சத்யராஜூடன் மிக நன்றாக ஒத்துழைத்து நடித்துக் கொண்டிருக்கிறாராம் சங்கவி.

எப்படி இருந்த சங்கவி இப்படி ஆயிட்டாரே..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil