»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இரண்டு பேர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹீரோயின் சான்ஸ் அடித்துள்ளது சங்கவிக்கு. அந்தப் படத்தில்சோலோ ஹூரோயினாகத் தான் புக் ஆனார் சங்கவி. ஆனால், தயாரிப்பாளரைச் சந்தித்து மனம் திறந்து பேசியராதிகா செளத்ரி, தானும் அதில் ஒரு ஹீரோயின் ஆனார்.

இதனால் மனம் வெறுத்துப் போயிருந்த சங்கவிக்கு இப்போது தனி ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.கலாட்டா கணபதி என்ற படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அன்புத் தொல்லை படத்தில் ரவளியை ஹீரோயினாக்கி, புகுந்து விளையாண்டார் பாண்டியராஜன். இந்தப்படத்திலும் மீண்டும் ரவளியையே ஹீரோயின் ஆக்க பாண்டியராஜன் வலியுறுத்தியும் கூட இயக்குனரின்சாய்ஸ்படி சங்கவி ஹீரோயின் ஆகிவிட்டார்.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. கூடவே கவர்ச்சிக்கும்பஞ்சம் இருக்காதாம். சங்கவிக்கு படுகவர்ச்சி வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியராஜன், சிட்டிபாபு, பாண்டு, வெண்ணிற ஆடை மூர்த்தி என காமெடியர்கள் நிறையப் பேர் இப்படத்தில்உள்ளனர். படத்தை கார்த்திக்குமார் இயக்குகிறார். படத்தில் கான்ஸ்டபிள் வேடத்தில் வருகிறாராம் பாண்டியராஜன்.

விஜய் உள்ளிட்ட இளவட்டங்களுடன் வலம் வந்த சங்கவிக்கு இரண்டாம் சுற்று ஆரம்பித்துள்ளது. ஆனால் ராம்கி,பாண்டியராஜன் என மிடில் ஏஜ் ஹீரோக்களுடன் தான் நடிக்க சான்ஸ் கிடைத்து வருகிறது.

இந்தப் படத்தில் நடிக்க, ஏகப்பட்ட முயற்சிகளுக்குப் பின்னர் தான், இயக்குனரை வளைத்து ஹீரோயின் ஆனாராம்சங்கவி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil