»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சங்கவி தனது தளராத முயற்சியால் மீண்டும் தமிழில் ஹீரோயின் சான்ஸ்களைப் பிடித்து வருகிறார்.

விஜய்யுடன் நடித்து படா படா கவர்ச்சியெல்லாம் காட்டிய இவரை பின்னர் விஜய் கண்டுகொள்ளவில்லை.வாய்ப்புக்கள் இல்லாமல் போகவே யாரோ சொன்ன யோசனையைக் கேட்டு உடம்பைக் குறைத்தார்.

ஒல்லிக் குச்சியாய் மாறிய அவர் ரஜினியைச் சந்தித்துப் பேசி பாபாவில் ஒரு சின்ன ரோல் வாங்கினார். பாபாவின்ரெக்கமென்டேசனில் பஞ்ச தந்திரத்திலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதுவும் துக்கடா வேடம் தான்.

அதற்குப் பின் ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஹைதராபாத்துக்குப் பறந்து போய் தெலுங்கில்முயன்று பார்த்தார். அங்கு இவரைப் பார்த்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் உடம்பை ஏற்றிக் கொண்டுவந்தால் தான் சான்ஸ் என்று கூறிவிட்டதால் மீண்டும் குண்டாகும் முயற்சிகளில் இறங்கினார்.

மீண்டும் தனது சொந்த ஊரான மைசூருக்கே போய் உடம்பை ஏற்றினார். இதன் பின்னரும் கூட தெலுங்கில்வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் நொந்து போயிருந்த அவர் மீண்டும் தமிழ் பக்கம் வாய்ப்பு தேடினார்.

தீவிர முயற்சியில் பலனாக இரண்டு பேர் என்ற படத்தில் சான்ஸ் கிடைத்தது. இதில் ராம்கிக்கும் ஜோடியாக நடித்துவருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்குக்காக சென்னை வந்த சங்கவி தொடர்ந்து தயாரிப்பாளர்களை நேரில்சந்தித்து கேட்க விதத்தில் கேட்க பாதுகாப்பு என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.

மேலும் பல தயாரிப்பாளர்களை சந்தித்த வண்ணம் இருக்கிறார் சங்கவி. இவர் மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தாலும்ஆச்சரியப்படுதவற்கில்லை.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil