»   »  அழகு ரசிகா சங்கீதா

அழகு ரசிகா சங்கீதா

Subscribe to Oneindia Tamil

தொடர்ந்து வில்லங்க படங்களிலேயே நடித்து வரும் சங்கீதா, புதிதாக ஒரு வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படத்தில் நடிக்கவுள்ளார்.

ரசிகா என்ற பெயரில் நடித்துக் கொண்டிருந்தபோது, எந்தவித பிரேக்கும் இல்லாமல் சோபையாக இருந்தது சங்கீதாவின் மார்க்கெட். ஆனால் சங்கீதா என்ற பெயர் மாற்றத்திற்குப் பிறகு கொஞ்சம் போல புத்துணர்ச்சி கிடைத்து புதுப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதிலும் உயிர் படத்திற்குப் பிறகு பெரும் பிரபலமானார் சங்கீதா. அவரைத் தேடி வித்தியாசமான, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்கள் தேடி ஓடி வந்தன.

ஆனாலும் பார்த்துப் பார்த்து கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார் சங்கீதா. இப்போது அவர் தனம், எவனோ ஒருவன் என இரு படங்களில் நடித்து வருகிறார் சங்கீதா. அதில், தனம் படத்தில் தேவதாசிப் பெண்ணாக நடிக்கிறார் சங்கீதா.

இந்தப் படத்தின் கதையும் கூட வில்லங்கமானதுதான். ஆனால் விரசம் இல்லாத கேரக்டர் இது என்கிறார் தனம் படத்தின் இயக்குநர்.

இதுதவிர சுந்தரி என்ற புதிய படத்திலும் சங்கீதா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுவும் சற்றே வித்தியாசமான கதைதானாம். அதாவது ஒரு பெண்ணின் அழகை மையமாகக் கொண்ட கதையாம் இது.

அந்த அழகு, அப்பெண்ணுக்கு முன்னேற்றமாக அமைந்ததா, தடைக்கல்லாக மாறியதா என்பதுதான் கதையாம்.

கிளாமர், நடிப்பு சரிவர கலந்த பாத்திரமான இதில், சங்கீதாவுக்கு பட்டையைக் கிளப்பும் வகையில் பல காட்சிகளை வைத்துள்ளாராம் இயக்குநர் ஜவஹர்.

இப்படி தொடர்ந்து வில்லங்கமான கதைகளிலேயே நடிக்கிறீர்களே ஏன் என்று சங்கீதாவிடம் கேட்டால், இதை ஏன் வில்லங்கம் என்கிறீர்கள். ஹீரோக்கள் வித்தியாசமாக நடித்தால், அடடா என்று பாராட்டுகிறீர்கள், நடிகைகள் நடித்தால் வில்லங்கம் என்கிறீர்கள். ஏன் சார் இந்த பாகுபாடு என்று செல்லமாக கோபித்துக் கொள்கிறார்.

தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான பாத்திரங்களிலேயே நடிக்கப் போவதாக சங்கீதா கூறுகிறார். அதில் தான் உறுதியாக இருப்பதாகவும் உறுதியோடு சொல்கிறார்.

Please Wait while comments are loading...