»   »  சங்கீதா: தமிழ், தெலுங்கு to

சங்கீதா: தமிழ், தெலுங்கு to

Subscribe to Oneindia Tamil
ரசிகாவாக இருந்து பின்னர் நேமாலஜி நிபுணரின் உதவியால் சங்கீதாவாக மாறினாலும் ரசிகாவுக்கு தமிழில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லை. தெலுங்கிலும்சரிவுக் காலம்.

ரசிகா என்ற பெயரிலாவது தமிழில் சின்ன ரவுண்டு வர முடிந்தது. ஆனால், நடிகர் பாண்டியராஜன் குத்தகைக்கு எடுத்த சொத்து மாதிரி தொடர்ந்து அவரதுபடங்களில் மட்டும் தான் தலைகாட்டி வந்தார்.

பின்னர் பிரபுதேவா போன்றவர்களோடு இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக வந்து தேவ தரிசனம் காட்டிவிட்டுப் போனார்.

இதையடுத்து சினிமா விழாக்கள் ஒன்றுவிடாமல் கலந்து கொண்டு தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் சந்தித்து வாய்ப்பு கேட்டு வந்தார். கலர்கலரான போட்டோக்கள் அடங்கிய ஆல்பத்தையும் ஒரு ரவுண்டு விட்டார்.

ஒருத்தரும் வாய்ப்பு தராத நிலையில் பாலா கை கொடுத்தார். தனது பிதாமகன் படத்தில் கஞ்சா விற்க வைத்தார். இதன் மூலம் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகாவும்தன்னால் நடிக்க முடியும் என்று சங்கீதா நிரூபித்தாலும் கோடம்பாக்கம் கண்டுகொள்ளவில்லை.

பிதாமகனில் இவரது நடிப்பைப் பார்த்து கேரளா சினிமா கூப்பிட்டது. அங்கு சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியவில்லை.

கடுப்பாகிப் போன சங்கீதா பொட்டி, படுக்கையுடன் தாயகமான ஹைதராபாத்துக்குத் திரும்பிப் போய் தெலுங்கில் கிடைத்த ஒன்றிரண்டு படங்களில் ஆடலுடன்சில சீன்களில் தலைகாட்டி வந்தார். இப்போது அந்த துக்கடா வாய்ப்புக்களைப் பிடிக்கவும் ஏக அடிதடி.

தமிழ், தெலுங்கில் வாய்ப்பிழந்தவர்களுக்கு கை கொடுக்கும் கன்னட சினிமா தான் இப்போது சங்கீதாவுக்கு உதவி வருகிறது.

கன்னடத்தில் சம்பளம் ரொம்ப சொற்பம் தான் கிடைக்கும். இதனால், முடிந்தவரை சம்பாதித்திவிட்டு செட்டில் ஆவோம் என்ற முடிவில் இருக்கும்நடிகைகளின் கடைசி புகலிடமாக கன்னட சினிமா இருந்து வருகிறது.

இந்த வரிசையில் சமீபத்தில் மீனா அங்கு கொடி கட்டிப் பறந்தார். இப்போது சங்கீதா அங்கே புகுந்துள்ளார்.

பெங்களூரில் சந்தோஷத்துடன் நடித்துக் கொண்டிருக்கும் சங்கீதா சமீபத்தில் சென்னை வந்தார். வழக்கம்போல ஒரு சினிமா விழாவுக்குத்தான்.

பார்த்தவுடன் பளிச் என "எல்லாம்" தெரியும் வகையில் வெள்ளை டிரான்ஸ்பரன்ட் சேலையில் வந்த சங்கீதாவைப் பார்த்து அத்தனை பேர் வாயிலும் ஜொள்ளோஜொள். அதைத்தானே சங்கீதாவும் எதிர்பார்த்தார்!

சங்கீதாவின் அழகில் கிரங்கிப் போன புகைப்படக்காரர்கள் பின்னர் சுதாரித்துக் கொண்டு பட படவென படு சுறுசுறுப்பாக படம் பிடிக்க ஆரம்பித்தனர்.பிளாஷ் ஒளியில் சங்கீதா நனையோ நனை என்று நனைந்தார்.

ஆனால் கேமராக்காரர்கள் இப்படி ஒரேயடியாக மொய்ப்பார்கள் என்பதை எதிர்பார்க்காத சங்கீதா, டக்கென சுதாரித்துக் கொண்டு மேடையை விட்டுவேகமாக அகன்றுவிட்டார்.

அப்படி ஒரு டிரஸ்ஸில் மேடைக்கு வருவானேன், இப்படி ஓடிவானேன்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil