Just In
- 3 hrs ago
எனக்கு இப்பவே அந்த மாதிரி ஃபீலிங்கா இருக்கே... ஈஸ்வரன் பட நடிகை லொள்ளு !
- 3 hrs ago
ரெட் சில்லி ஆண்ட்ரியா … இது செம காரம் மச்சி!
- 3 hrs ago
அருண் விஜயின் 31வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு... டப்பிங் பணி ஆரம்பம்!
- 4 hrs ago
பார்த்ததுமே குப்புன்னு வியர்க்கும்.. கேஜிஎப்-பை தூக்கி சாப்பிடறோம்.. தளபதி 65 லேட்டஸ்ட் அப்டேட்
Don't Miss!
- News
'இது சர்தார் படேலுக்கு நேர்ந்த அவமானம்' - நரேந்திர மோடி ஸ்டேடியத்தை பிரித்து மேயும் காங்கிரஸ்
- Automobiles
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
- Sports
போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நோ பிளான்.. அது அது.. எல்லாம் தானா நடக்கும்.. ‘அழகு‘ சங்கீதா பேட்டி
சென்னை : என் வாழ்கையில நான் எதையும் பிளான் பண்ணதே இல்லை எல்லாம் தானா நடக்குது விஜே சங்கீதா கூறியுள்ளார்.
நாடக நடிகை மற்றும் தொகுப்பாளரான சங்கீதா தற்போது அழகு நாடகத்தில் வில்லியாக நடித்து வருகிறார். தற்போது அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை மற்றும் தொகுப்பாளர் சங்கீதா முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த தொலைக்காட்சியில் செந்தமிழ் பெண்ணே, பிறந்தநாள் வாழ்த்துக்கள்,24ப்ரேம்ஸ், பிராங்கா சொல்லட்டா மற்றும் லேடீஸ் சாய்ஸ் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலம் ஆனார்.
சின்னதிரையில் தொகுப்பாளராக அனைவரும் ரசித்த விஜே சங்கீதா ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவான டிக் டிக் டிக் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் கால்பதித்தார்.

அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், நான் வாழ்க்கையில் எதையும் பிளான் பண்ணது இல்லை என்றார். ஏனெனில் பிளான் பண்ணி, தோற்று போனால் அது மிக பெரிய வலியாக மாறிவிடும் அதனால் நான் எதையும் பிளான் பண்ணது கிடையாது என்று கூறினார் .
நான் ஐடி கம்பெனியில் பணியாற்றும் போது இதனை எதிர்பார்க்கவில்லை அதற்கு பிறகு தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் நான் எதனையும் பிளான் செய்யவில்லை அதற்கு பிறகு அழகு நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் முதலில் சாதாரணமாக தான் வடிவமைக்கபட்டது அதன் பின் அப்படியே நான் நடிக்கும் பூர்ணா கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரமாக மாற்றபட்டது என்று கூறினார் .

மேலும் தான் சிறு வயதில் இருந்தே தளபதி ரசிகை தனக்கு தளபதி விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார் . 90ஸ் கிட்ஸ் நான், விஜய் படம் பார்த்து தான் நான் வளர்ந்தேன் அதனால் எனக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார் .
மேலும் எனக்கு ரஜினியின் ஸ்டைல் மிகவும் பிடிக்கும் ரஜினி படங்களில் அவரின் ஸ்டைலை மிகவும் ரசித்து பார்த்து இருக்கிறேன் என்றார் , தொகுப்பாளர் அழகு நாடகத்தில் நடிப்பதை போல ரஜினியுடன் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்க 'அய்யோ நான் அத கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்ல' நான் எதிரே பார்க்காத ஒன்று என கூறினார். வாழ்வில் எதையும் பிளான் பண்ணாமல் உண்மையான உழைப்பின் மூலம் கட்டாயம் உயரலாம் என்றும் தெரிவித்து கொண்டார்.