»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

பிதாமகன் படம் சூப்பர் ஹிட் ஆகியும் ரசிகா என்ற சங்கீதாவுக்கு வாய்ப்புகள் குவியாததால் மீண்டும் கவர்ச்சிசேவையில் குதித்துள்ளார்.

தொடையழகுக்கு ரம்பா, முன்னழகுக்கு மந்த்ரா என்று சினிமா ரசிகர்கள் கொடி நட்டியபோது, இரண்டுக்கும் நான்இருக்கிறேன் என்று கோயம்புத்தூரில் இருந்து வந்து களத்தில் குதித்தார் ரசிகா. கவர்ச்சி வேடங்களில் கார்த்திக்,பாண்டியராஜன் உள்ளிட்ட மார்க்கெட் இல்லாத நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.

எந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சங்கீதா என்ற பெயரை மாற்றிக் கொண்டு தெலுங்குப்பக்கம் போய் கவர்ச்சி மழையாய் கொட்டினார். பணமும் கொட்டியது. இந் நிலையில் தான் வாழ்நாள் முழுமைக்கும்பெயர் சொல்லும்படியான ஒரு கேரக்டரை பிதாமகன் படத்தில் அவருக்குக் கொடுத்தார் இயக்குனர் பாலா.

ரசிகாவும் சும்மா சொல்லக் கூடாது. இவருக்குள் இத்தனை நடிப்புத் திறமையா என்று வியக்க வகையில் தான்நடித்தார்.

ஆத்திரம், காதல், இரக்கம், கோபம் என அத்தனை உணர்ச்சிகளையும் படத்தில் பிரமாதமாக வெளிப்படுத்தி, கஞ்சாவிற்கும் பெண் என்ற வேடத்துகு உயிரூட்டினார். என்ன பிரயோசனம்? படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்றுபாராட்டுகள்தான் வந்தனவே தவிர, வாய்ப்புகள் வரவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சங்கீதா வேறு வழியின்றி மீண்டும் கவர்ச்சி கடலில் குதித்துவிட்டார். இளங்கோஎன்ற படத்தில் விக்னேசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சேலையை மறந்து விடவேண்டும் என்றகண்டிசனுடன்தான் ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

பொதுவாக காதலுக்கு சாதி, பணம், அந்தஸ்து இவற்றால்தான் எதிர்ப்பு வரும். ஆனால் இளங்கோ படத்தில்காதலர்களுக்கு எதிர்ப்பு வேறொரு ரூபத்தில் வருகிறது. அதை வென்றார்களா இல்லையா என்பதுதான் கதைஎன்கிறார் அறிமுக இயக்குனர் வேல் தென்னரசு.

ரசிகாவின் கவர்ச்சி போதாதென்று படத்தில் அனுஷாவையும் சேர்த்திருக்கிறார்கள்.இலங்கை, சென்னை, திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil