»   »  திட்டு வாங்கிய சந்தியா

திட்டு வாங்கிய சந்தியா

Subscribe to Oneindia Tamil

சரியாக வராததால் இயக்குனரிடம் செமத்தியாக திட்டு வாங்கினாராம் புதுமுக நடிகை சந்தியா.

இயக்குனர் ஷங்கர் தனது எஸ் பிலிம்ஸ் சார்பில் தனது சீடர் பாலாஜி சக்திவேலை வைத்து தயாரிக்கும் படம் காதல். இந்தப் படத்தில் பாய்ஸ்பரத், ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சந்தியா என்ற கேரளத்துப் பைங்கிளி நடிக்கிறார்.

படப்பிடிப்பு வெகு வேகமாக முடிந்து ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்கள். நாளை மறுநாள் படம் ரிலீஸாகிறது. முதல் படம் முடிந்துரீலீஸ் ஆவதற்கு முன்பே சந்தியாவிற்கு அடுத்ததாக இரண்டு படங்கள் புக் ஆகிவிட்டன. அதற்குக் காரணம் அவர் படத்தில் காட்டியதாராளமய கொள்கை.

ஏற்கனவே புஸ் புஸ் என்றிருக்கும் கன்னம் புதிய பட வாய்ப்புக்களால் சந்தோஷத்தால் இன்னும் கொஞ்சம் பூசியிருக்கிறது. கூடல்நகர் என்றஒரு படத்திலும், குறும்பு பட இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் ஒரு படத்திலும் சந்தியா நடிக்கிறார்.

இவரது சொந்தப் பெயர் ரேவதி. தமிழில் ஏற்கனவே ஒரு ரேவதி இருப்பதால் ஷங்கர்தான் பெயரை மாற்றி வைத்துள்ளார். சந்தியாகேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் படித்தது எல்லாம் சென்னையில்தான் என்பதால் சரளமாகத் தமிழ் பேசுகிறார்.

அனைத்து வகை நடனங்களையும் கரைத்து குடித்திருக்கிறார். கருப்பாகவும் அழகாகவும் இருக்கும் சந்தியா அதோடு அழகாகவும்பாடுகிறார். இப்போதான் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

நண்பர் ஒருவர் மூலமாக சந்தியாவின் போட்டோவைப் பார்த்த ஷங்கர், தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆசை கலந்த பயத்துடன்ஷங்கர் அலுவலகத்திற்குப் போனவர் , மேக்கப் டெஸ்டில் பாஸாகியுள்ளார்.

பிறகென்ன? படத்தை மளமளவென்று சூட் செய்து, இதோ ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்கள். சிறுவயது முதலே சென்னை வாசம்என்பதால் அட்சர சுத்தமாக தமிழ் பேசுகிறார்.

அவரிடம் பேசியதில் இருந்து....


நூறு படங்கள் நடித்து பேர் இல்லாமல் போவதை விட, பத்து படங்கள் நடித்து பேர் வாங்குவதையே விரும்புகிறேன். மற்ற மொழிகளில்நடிப்பதை விட தமிழில் நடிப்பதையே விரும்புகிறேன். (முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலேயே நெஞ்சைத் தடவுற மாதிரி இப்படிபேச எங்கே கத்துக்கிறாங்களோ?)

நான் சின்னப் பொண்ணு என்பதால் எனக்குப் புரியற மாதிரி பாலாஜி சக்திவேல் கதையை சொல்லிக் கொடுத்தார். படப்பிடிப்பு திண்டுக்கல்அருகே தொடங்கியது. தொடர்பான செய்திகள் கேமரா அனுபவம் இல்லாததால் நிறைய கஷ்டப்பட்டேன்.

அடிக்கடி பிரேம் விட்டு விலகிப் போய்விடுவேன். பாலாஜி சக்திவேல் ஒன்று சொல்ல நான் ஒன்று செய்வேன். பொறுத்துப் பொறுத்து,கடைசியில் பொறுமை பறந்துபோய் இயக்குனர் என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்.

எனக்கு அழுகை தாங்க முடியவில்லை. அம்மாதான் என்னைத் தேற்றி நடிக்க வைத்தார்கள். பிறகு யூனிட்டே மெச்சும்படி நடிப்பில்பொளந்து கட்டினேன். ரஷ் போட்டு பார்த்து விட்டு ஷங்கர் ரொம்பவும் பாராட்டினார் என்றபோது சந்தியாவின் முகத்தில் பெருமை தாங்கமுடியவில்லை.


சரி, படிப்பு அவ்வளவுதானா என்று கேட்டபோது இல்லை என்று தலையாட்டுகிறார். பத்தாம் வகுப்பில் சேர்ந்து 3 மாதம் ஆனபோது நடிக்கவந்தேன். இதோ அரையாண்டுத் தேர்வு வந்துவிட்டது.

இப்போது வீட்டுக்கு ஆசிரியரை வரவழைத்து படித்து வருகிறேன். நிச்சயம் படிப்பை விட்டு விட மாட்டேன். நடிப்புக்காக ஸ்கூல் லைப்பைமிஸ் பண்றோமே என்ற வருத்தம்தான் எனக்கு என்றார்.

ஸ்கூல், சின்னப்பொண்ணு என்று சந்தியா பேசினாலும் படத்தில் பரத்துடன் காட்டியிருக்கும் நெருக்கத்தைப் பார்த்தால் கொஞ்சம்சந்தேகமாகத்தான் இருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil