»   »  சரண்யாவின் திக்.. திக் .. திக் ..!

சரண்யாவின் திக்.. திக் .. திக் ..!

Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக ரெண்டாவது படத்துக்கு ரெடியாகி விட்டார் சரண்யா பாக்யராஜ்.

பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் ஒரே மகளான சரண்யாவும் இப்போது ஒரு ஹீரோயின். அப்பாவின் இயக்கத்தில் பாரிஜாதம் படம் மூலமாக நடிகையானார் சரண்யா.

அம்மாவைப் போல அழகும், நடிப்பும் கூடி வந்த நடிகையாக இதில் பரிமளித்தார் சரண்யா. பாந்தமான அழகுடன், கண்ணியமான நடிப்பைக் கொடுத்தார் என்று பலரும் பாராட்டினர்.

ஆனால் அடுத்தடுத்து நடிக்காமல் முடங்கிக் கிடந்தார் சரண்யா. மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படம் நடித்தார். ஆனால் அந்தப் படமும் அவருக்கு பலனைக் கொடுக்கவில்லை.

இதையடுத்து நல்ல வாய்ப்பு வரும் வரை காத்திருக்க முடிவு செய்தார் சரண்யா. அந்த வாய்ப்பு இப்போது வந்து சேர்ந்துள்ளது.

கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர் புதிதாக ஒரு படத்தை இயக்கவுள்ளார். திக் திக் திக் என அப்படத்துக்குப் பெயர் வைத்துள்ளார். திரில்லர் கதை இது. இதில் சரண்யாதான் ஹீரோயினாக நடிக்கிறார்.

மல மல மும்தாஜ் 2வது நாயகியாக நடிக்கிறார். கிளாமர் சைடுக்காக மும்தாஜை போட்டுள்ளனராம். இப்படத்தில் நாயகிக்கே முக்கியத்துவமாம். ஹீரோவுக்கு அதிக வேலை இல்லையாம். சில காட்சிகள் மட்டுமே வரும் வகையில் ஹீரோ ரோலை வடிவமைத்துள்ளாராம் இகோர். இதனால் ஹீரோவாக யாரும் இதுவரை சிக்கவில்லையாம்.

இந்தப் படத்தை முடித்த பின்னர் சரண்யாவை வைத்து இன்னொரு படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்திலும் இரண்டு நாயகிகளாம்.

தொடர்ந்து நடித்து அசத்து பாப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil