»   »  பல் டாக்டரை கரம் பிடிக்கும் சரண்யா மோகன்: சினிமாவுக்கு முழுக்கு

பல் டாக்டரை கரம் பிடிக்கும் சரண்யா மோகன்: சினிமாவுக்கு முழுக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பல் டாக்டரை திருமணம் செய்யப் போகிறார் நடிகை சரண்யா மோகன் மணக்க உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இந்த செய்தியை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார்.

திருமணத்திற்குபின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறும் சரண்யா மோகன், நடனப்பள்ளியில் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார்.

சரண்யா மோகன்

சரண்யா மோகன்

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை சரண்யா மோகன்.

வெண்ணிலா கபடிக்குழு

வெண்ணிலா கபடிக்குழு

1997ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் காதலுக்கு மரியாதை உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தவர். குமரியான பின்னர் தமிழில் 'யாரடி நீ மோகினி', 'வெண்ணிலா கபடிக் குழு', 'அழகர்சாமியின் குதிரை' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

சரண்யா மோகனுக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டரான அரவிந்த் கிருஷ்ணன் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. செப்டம்பர் 6ம் தேதி கொட்டக்குழங்கராவில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்தனர்.

நடிப்புக்கு முழுக்கு

நடிப்புக்கு முழுக்கு

இது பெற்றோர் நிச்சயித்த திருமணம் என்று சரண்யா மோகன் கூறியுள்ளார். ஆலப்புழாவில் நடனப் பள்ளி நடத்துகிறேன். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன். நடனப் பள்ளியிலும் பாடுவதிலும் கவனம் செலுத்துவேன்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

இதனிடைய சரண்யாவின் ஃபேஸ்புக் பக்கம் 50000 லைக்குகளைக் கடந்துள்ளது. இதற்கும் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் சரண்யா மோகன்.

English summary
Wedding bells are ringing loud and clear for Saranya Mohan. The young actor is all set to tie the knot with Thiruvananthapuram native Dr Arvind Krishnan on September 6 at Kottamkulangara temple near here.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil