»   »  இப்போ பதிவுத் திருமணம்... 2017-ல் பிரமாண்ட திருமணம்! - சாட்னா டைடஸ் அறிவிப்பு

இப்போ பதிவுத் திருமணம்... 2017-ல் பிரமாண்ட திருமணம்! - சாட்னா டைடஸ் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனக்கும் தயாரிப்பாளர் கார்த்திக்குக்கும் இடையே திருமணம் நடந்தது உண்மைதான் என்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் பிச்சைக்காரன் பட நாயகி நடிகை சாட்னா டைட்டஸ். அந்தக் கடிதத்தில் கார்த்திக்கும் கையெழுத்திட்டுள்ளார்.

பிச்சைக்காரன் படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் சாட்னா டைட்டஸ். இவரை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்தி பரவியது.

Satna Titus announced her marriage openly

அந்தச் செய்தி உண்மைதான் என்று கூறிய கார்த்திக், "இரு வீட்டார் சம்மதத்துடன் சாட்னா டைட்டஸை பதிவுத் திருமணம் செய்ததாக," விளக்கம் அளித்தார்.

ஆனால் இதனை மறுத்த சாட்னாவின் தாயார், தன் மகளை மூளைச் சலவை செய்து மயக்கிவிட்டார் கார்த்திக் என்றும், இந்தத் திருமணத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் கூறினார்.

இந்நிலையில் கார்த்திக் - சாட்னா இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்துடன், இருவரும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

Satna Titus announced her marriage openly

அதில், "கார்த்திக், சாட்னா டைடஸ் ஆகிய நாங்கள் இருவரும் மனதார காதலித்து, இருவரின் பூரண சம்மதத்துடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம்.

வரும் ஜனவரி 2017ல் எங்கள் இரு குடும்பங்களும், சுற்றமும், நட்பும் கூட, பெரும் மதிப்பிற்குரிய பத்திரிகையாளர்கள் உங்கள் ஆதரவுடன் பிரமாண்டமான முறையில் எங்கள் திருமணம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்," என்று கூறியுள்ளனர்.

    English summary
    Actress Satna Titus - Distributor Karthi have openly announced their marriage through a letter.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil