»   »  சொன்னபடியே பெற்றோர் சம்மதத்துடன் கார்த்திக்கை மணந்த பிச்சைக்காரன் நடிகை

சொன்னபடியே பெற்றோர் சம்மதத்துடன் கார்த்திக்கை மணந்த பிச்சைக்காரன் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சாட்னா டைட்டஸ் தனது காதலரான கார்த்திக்கை முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் மூலம் பிரபலமானவர் சாட்னா டைட்டஸ். அவர் அந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக்கை காதலித்தார்.

இதையடுத்து இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

இல்லை

இல்லை

என் மகளுக்கு பதிவுத் திருமணம் நடக்கவில்லை. கார்த்திக் என் மகளை மூளை சலவை செய்து எங்களிடம் இருந்து பிரித்துவிட்டார் என்று சாட்னாவின் தாய் குற்றம் சாட்டினார்.

பதிவுத் திருமணம்

பதிவுத் திருமணம்

கார்த்திக், சாட்னா டைடஸ் ஆகிய நாங்கள் இருவரும் மனதார காதலித்து, இருவரின் பூரண சம்மதத்துடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம் என்று இருவரும் கையெழுத்திட்ட கடிதத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பினார்கள்.

திருமணம்

திருமணம்

பெற்றோர் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் செய்து கொள்வோம் என்று சாட்னா, கார்த்திக் தெரிவித்திருந்தனர். அதன்படி கடந்த 6ம் தேதி சேலத்தில் அவர்களின் திருமணம் நடந்தது. இதில் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

வரவேற்பு

வரவேற்பு

சாட்னா, கார்த்திக்கின் திருமண வரவேற்பு நாளை சென்னையில் பிரமாண்டமாக நடக்க உள்ளது. இதில் திரையுலகினர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
Pichaikaran fame actress Satna Titus has married her boy friend Karthik at a ceremony held in Salem on february 6th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil