»   »  ஜெயம் ரவி மாதிரி ஒரு ஹீரோ கிடைப்பது வரம்: உருகும் நடிகை

ஜெயம் ரவி மாதிரி ஒரு ஹீரோ கிடைப்பது வரம்: உருகும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி மாதிரி ஒரு ஹீரோ கிடைப்பது வரம் என்று நடிகை சயீஷா சைகல் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியின் வனமகன் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளவர் மும்பையை சேர்ந்த சயீஷா சைகல். பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி. அடுத்ததாக சயீஷா கார்த்தி-விஷாலின் கருப்பு ராஜா, வெள்ளை ராஜா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

சினிமா பற்றி அவர் கூறியிருப்பதாவது,

தமிழ்

தமிழ்

நான் மும்பை பெண்ணாக இருந்தாலும் தமிழ் படம் மூலம் நடிகையாக அறிமுகமாக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. தெலுங்கு படத்தில் தான் முதலில் நடித்தேன்.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

நான் நடித்த தெலுங்கு படத்தை பார்த்துவிட்டு தான் விஜய் சார் எனக்கு வனமகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். புதிதாக கோலிவுட் வரும் ஹீரோயின்களுக்கு ஜெயம் ரவி போன்று ஒரு ஹீரோ கிடைத்தால் அது மிகப் பெரிய வரம் என்பேன்.

பிரபுதேவா

பிரபுதேவா

வனமகன் படத்தில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார். தற்போது அவர் இயக்கத்தில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடிக்கிறேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என நினைக்கிறேன்.

ஹன்சிகா

ஹன்சிகா

தயவு செய்து என்னை ஹன்சிகாவோடு ஒப்பிட வேண்டாம். நான் நானாக இருக்க விரும்புகிறேன். யாரும் யார் இடத்தையும் பிடிக்க முடியாது. அவரவருக்கு என ஒரு இடம் உள்ளது என்றார் சயீஷா.

English summary
Sayeesha Saigal couldn't stop praising her tamil debut movie Vanamagan hero Jayam Ravi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil