»   »  நிலம், வீடு வச்சிருக்கேன், கட்டிக்கோங்க: ப்ரபோஸ் செய்த ரசிகருக்கு டிமிக்கி கொடுத்த நடிகை

நிலம், வீடு வச்சிருக்கேன், கட்டிக்கோங்க: ப்ரபோஸ் செய்த ரசிகருக்கு டிமிக்கி கொடுத்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்விட்டரில் காதலை வெளிப்படுத்திய ரசிகர்களுக்கு அழகாக பதில் அளித்துள்ளார் நடிகை சயீஷா.

வனமகன் பட ஹீரோயின் சயீஷா சைகல் ஏற்கனவே கோலிவுட் ஹீரோக்களின் மனம் கவர்ந்துவிட்டார். அவர் நடித்த முதல் படம் ரிலீஸாவதற்குள் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.

திருமணம்

என்னை திருமணம் செய்வீர்களா? என்னிடம் 5 ஏக்கர் விவசாய நிலம், தோட்டத்துடன் கூடிய அழகிய வீடு, ஸ்கூட்டர் மற்றும் உங்கள் மீது நிறைய காதல் உள்ளது என்று ரசிகர் ஒருவர் சயீஷாவிடம் கேட்க அவரோ, சோ ஸ்வீட், உங்கள் அன்பை மதிக்கிறேன் என்று கூறி சமாளித்துவிட்டார்.

கோவில்

தமிழ் படங்களை தவிர்க்க வேண்டாம். உங்கள் மீது நாங்கள் வைத்துள்ள அன்பை கோவில் கட்டி வெளிப்படுத்துவோம் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்தார். உங்கள் அன்பு தான் எனக்கு அனைத்துமே என்றார் சயீஷா.

லவ்

லவ் யூ சோ மச் என்று ரசிகர் ஒருவர் கூற நாளைக்கு புதன்கிழமை என்பது போன்று லவ் யூ டூ சொன்னாள் என்று 7 ஆம் அறிவு படத்தில் சூர்யா சொல்வது போன்று பதில் அளித்துள்ளார் சயீஷா.

காதல்

நான் ப்ரபோஸ் செய்கிறேன் ஆனால் நீங்கள் கண்டுகொள்ளவில்லையே. ஐ லவ் யூ என்றவருக்கு நன்றி, லாட்ஸ் ஆஃப் லவ் என்று கூறி பஞ்சாயத்தை பைசல் செய்தார் சயீஷா.

English summary
Vanamagan heroine Sayesha Saigal knows how to handle fans. Sayesha's debut tamil movie is hitting the screens tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil