»   »  சீதையாக நடித்த நயன்தாரா ராதையாக நடிக்கிறார்

சீதையாக நடித்த நயன்தாரா ராதையாக நடிக்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பக்திப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து சீதையாக நடித்த நயன்தாரா தற்போது வெங்டேஷ் உடன் இணைந்து ராதையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெங்கடேஷுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டார் என்ற செய்தி வெளிவந்த நிலையில், அந்த படம் கிருஷ்ணன் மற்றும் ராதை கதையில் உருவாகும் படம் என்றும் இந்த படத்தில் கிருஷ்ணனாக வெங்கடேஷும் ராதையாக நயன்தாராவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இது பக்திப்படமல்ல மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

ஹாட்ரிக் ஜோடி

ஹாட்ரிக் ஜோடி

தெலுங்கின் முன்னணி நடிகரான வெங்கடேஷ் உடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. முன்னதாக இவர்கள் நடிப்பில் வெளிவந்த லக்ஷ்மி மற்றும் துளசி படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

ராதையாக நயன்தாரா

ராதையாக நயன்தாரா

வெங்கடேஷ் - நயன்தாரா வெற்றி ஜோடி தற்போது மாருதி இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு இசை ஜிப்ரான் என்றும், படத்தின் பெயர் ராதாகிருஷ்ணா என்றும் கூறப்படுகிறது. எனினும் படத்தின் மற்ற அதிகாரப் பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வெற்றிக்கூட்டணி

வெற்றிக்கூட்டணி

வெங்கடேஷ், ஜனவரியில் வெளிவந்த கோபாலா கோபாலா படத்தில் நடித்திருந்தார். அதன்பின் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கிறார். தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்து வரும் நயன்தார மீண்டும் தெலுங்கில் வெங்கடேஷ் உடன் இணைகிறார். இப்படம் வெற்றியடைந்து, இவர்கள் கூட்டணியில் ஹாட்ரிக் அடிக்குமா என ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா அரசு விருது

ஆந்திரா அரசு விருது

தமிழ், மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த படம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சீதையாக நடித்த நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்த நிலையில் ராதை கேரக்டருக்கு என்ன விருது அவருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Venkatesh appeared to have lay dormant ever since the release of 'Gopala Gopala'. Finally, his hibernation mode is going to be ended in the month of December. Crazy heroine Nayantara will sport female lead of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil