செல்வராகவனுடன் டைவர்ஸ்.. அவர் மனைவியை இப்போ பார்த்தால் இதான் ரியாக்ஷன்.. முன்னாள் மனைவி ஓபன்

சென்னை: இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். அவர் இயக்கிய பல படங்கள் இப்போதுவரை கொண்டாடப்படுகின்றன. அவர் முதலில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை டைவர்ஸில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து கீதாஞ்சலில் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் அவர். இந்நிலையில் சோனியா அகர்வால் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

தனுஷின் சகோதரரான செல்வராகவன்தான் தனுஷின் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு காரணம். தனுஷை வைத்து அவர் இயக்கிய காதல்கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய மூன்று படங்களுமே கல்ட் க்ளாசிக். அவை மட்டுமின்றி 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் எல்லாமே அவரை சிறந்த இயக்குநர் என்று ரசிகர்களிடமும் திரைத்துறையினரிடமும் அடையாளம் காண்பித்தது.

சறுக்கலை சந்தித்த செல்வராகவன்: கமல்ஹாசன், சிம்பு ஆகியோரை எல்லாம் வைத்து அவர் படம் இயக்குவதாக இருந்தது. முக்கியமாக அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிடமாட்டோமா என்று பல நடிகர்கள் ஏங்கியும் இருக்கிறார்கள். ஆனால் ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவரது இயக்குநர் பயணம் இடையில் தடைபட்டது. அவர் இயக்கிய படங்கள் எல்லாம் தோல்வி அல்லது சுமார் என்ற ரகத்தில்தான் இருந்தன.

Selvaraghavan s ex-wife Sonia Agarwal has spoken openly about Geetanjali

மீண்டும் வந்த செல்வா: உடனடியாக தனது ரூட்டை மாற்றிய அவர் இப்போது நடிகராக பிஸி. அதேசமயம் அவர் மீண்டும் இயக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களில் பெரும்பாலானோரின் கருத்து. அவரும் மீண்டும் படம் இயக்கவிருக்கிறார். அந்தவகையில் 7ஜி ரெயின்போ காலனி 2, ஜிவி பிரகாஷை வைத்து மென்டல் மனதில் ஆகிய படங்களை இயக்குகிறார். எப்படியாவது அவர் ஒரு இயக்குநராக கம்பேக் கொடுத்துவிட வேண்டும் அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

திருமண வாழ்க்கை: இதற்கிடையே காதல்கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களை இயக்கியப்போது அதன் ஹீரோயின் சோனியா அகர்வாலை காதலித்தார் செல்வா. இரண்டு பேரின் திருமணத்துக்கும் வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து திருமணம் செய்துகொண்டார்கள். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிரிந்துவிட்டார்கள். சோனியாவை பிரிந்த செல்வா, அடுத்ததாக கீதாசலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.

சோனியாவின் பேட்டி: சோனியா அகர்வாலை பொறுத்தவரை சிங்கிளாக இருக்கிறார். அதேசமயம் நடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சமூக அழுத்தங்களுக்காக பலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். நான் அப்படி இல்லை. எமோஷனலாக பாண்டிங் ஆனதால்தான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் சில வருடங்களிலேயே எங்களுக்குள் ஒத்துவரவில்லை என்று தெரிந்தது.

கீதாஞ்சலியை பார்த்தால்: அதனால் நாங்கள் எந்த சண்டையுமின்றி ஒருவரையொருவர் பேசி பரஸ்பரமாக பிரிந்துவிட்டோம். நல்லவேளை அப்போதெல்லாம் சோஷியல் மீடியாக்கள் இல்லை. நான் இப்போதும் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியை பார்த்தால் ஹாய், ஹலோ என்று பேசுவேன். அவருடன் நான் நல்ல நட்பில்தான் இருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X