»   »  செம போத ஆகாதா: சினேகா, அனுஷ்கா வரிசையில் 'விலைமாது'வாக நடிக்கும் அனைகா சோதி

செம போத ஆகாதா: சினேகா, அனுஷ்கா வரிசையில் 'விலைமாது'வாக நடிக்கும் அனைகா சோதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதர்வா சொந்தமாகத் தயாரித்து நடித்து வரும் 'செம போத ஆகாதா' படத்தில் நடிகை அனைகா விலைமாதுவாக நடித்து வருகிறார்.

பாணா காத்தாடி பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் படம் 'செம போத ஆகாதா'. இப்படத்தை அதர்வா தனது கிக்காஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.

இதில் அதர்வாவுக்கு ஜோடியாக அனைகா சோதியும் முக்கிய வேடங்களில் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா மற்றும் ஜான் விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்திற்காக நடிகை ரம்யா நம்பீசன் பாடலொன்றை பாடிக் கொடுத்திருக்கிறார். 'குஷி' படத்தில் இடம்பெற்ற 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' பாடலைப் போல இப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பத்ரி வெங்கடேஷ்

பத்ரி வெங்கடேஷ்

'செம போத ஆகாதா' குறித்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இப்படத்தில் ''விலைமாது வேடத்தில் நடிக்க பல நடிகைளும் தயக்கம் காட்டினர். ஆனால் அனைகா துணிச்சலுடன் நடிக்க ஒப்புக் கொண்டார்.

5 பாடல்கள்

5 பாடல்கள்

இப்படத்தில் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. இதில் 2 பாடல்களின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் மீதமுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளையும் தொடங்கி விட்டோம். மொத்தப் பணிகளையும் முடித்து விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்'' என்று தெரிவித்திருக்கிறார்.

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்

'செம போத ஆகாதா' படத்தைத் தொடர்ந்து 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்', 'ருக்குமணி வண்டி வருது' போன்ற படங்களில் அதர்வா பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பாலா மற்றும் டிமாண்டி காலனி அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Badri Venkatesh Talks about his Upcoming Movie Semma Botha Aagatha in Recent Interview.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil