»   »  'இந்த' நடிகைகளுக்கு எல்லாம் எப்பப்பா திருமணம் நடக்கும்?: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

'இந்த' நடிகைகளுக்கு எல்லாம் எப்பப்பா திருமணம் நடக்கும்?: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் சுஷ்மிதா சென், தபு, பிபாஷா பாசு, ஸ்ரேயா, அனுஷ்கா, த்ரிஷா உள்ளிட்ட சீனியர் நடிகைகள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நடிகைகள் சினிமாவில் கவனம் செலுத்த திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். மார்க்கெட் எல்லாம் ஓய்ந்த பிறகு திருமணம் செய்து கணவர், குடும்பம் என செட்டிலாகிவிடுகிறார்கள்.

இந்நிலையில் சில சீனியர் நடிகைகள் எப்பொழுது திருமணம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்ணான நடிகை சுஷ்மிதா சென் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் வாழ்வில் சில முறை காதல் வந்தபோதிலும் இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

பிபாஷா பாசு

பிபாஷா பாசு

மாடலாக இருந்து பாலிவுட் நடிகையானவர் பிபாஷா பாசு. நடிகர் ஜான் ஆபிரகாமை பல ஆண்டுகள் காதலித்து பிரிந்துவிட்டார். தற்போது நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து வருகிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

தபு

தபு

நடிகை தபு என்னவோ காதலில் விழுந்தார், எழுந்தார் ஆனால் யாரையும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே உள்ளார். அவர் காலத்து ஹீரோயின்கள் எல்லாம் கையில் ஒன்று, பள்ளியில் ஒன்று என்று குழந்தைகளுடன் உள்ளனர். தபு தொழில் அதிபர் ஒருவரை மணப்பதாக செய்திகள் வெளியாகியதே தவிர அது ஒன்றும் நடக்கவில்லை.

ஸ்ரேயா

ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா பத்து ஆண்டுகளாக கோலிவுட், டோலிவுட், பாலிவுட் படங்களில் ஹீரோயினாக நடித்தார். மார்க்கெட் போன பிறகு விருது விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் அவர் இந்தி படத்தில் 2 பெண்களுக்கு அம்மாவாகவும் நடித்துவிட்டார். அவர் வாழ்வில் காதல் வருவது போன்று வந்து சென்றுவிட்டது. இதுவரை அவர் திருமணம் பற்றி யோசித்ததாக தெரியவில்லை.

த்ரிஷா

த்ரிஷா

கோலிவுட்டின் சீனியர் நடிகையான த்ரிஷாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அது நிச்சயதார்த்தத்தோடு நின்றுவிட்டது. தனக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்வேன் என்கிறார் த்ரிஷா.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்காவுக்கு வயதாகிக் கொண்டே போகிறது, சீக்கிரமாக திருமணத்தை முடிக்க வேண்டும் என்று அவரது பெற்றோரும் ஆண்டுக் கணக்கில் மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். நீங்கள் மாப்பிள்ளையை தேடுங்கள் நான் பாட்டுக்கு நடிக்கிறேன் என்று அனுஷ்கா படங்களில் பிசியாக உள்ளார்.

English summary
Senior actresses including Sushmita Sen, Trisha and Anushka are still single. Fans expect them to get married soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil