ப்ப்பா...பார்க்க பார்க்க கண்கூசுது.. ரேஷ்மா பசுப்புலேட்டியின் ஹாட் போட்டோஸ்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் மாமியாராக சாமுண்டீஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கனகச்சிதமாக நடித்து வரும்ரேஷ்மாவிற்கு என்று தனி ரசிகர்கள் இருப்பதால் எப்போதும், தனது ரசிகர்களுக்கு என்று இணையத்தில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்து இருக்கும் போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது.
விமான பணிப்பெண்ணாக தனது வாழ்க்கையை தொடங்கிய நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி, சினிமாவில் மீது இருந்த ஆர்வத்தால், சன்தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து, உயிர்மெய், சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர் என அடுத்தடுத்து சீரியலில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்து சீரியலில் பிரபலமானார். சின்னத்திரையில் நடித்து வந்த ரேஷ்மா, இனிமையான நாட்கள், வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடித்தார். இதில் வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்திற்கு இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி: சீரியல், சினிமா என இரண்டிலும் மாறி மாறி நடித்து வரும், ரேஷ்மா பசுபுலேட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா என்ற ரோலில், ஒரு குழந்தைக்கு தாயாக நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் சீரியலில், சாமுண்டீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் மூன்று பெண்களுக்கு அம்மாவான நிறைவான கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த சீரியலுக்கும் மக்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
ப்ப்பா என்ன அழகு: இப்படி பிஸியாக சினிமா , சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா, படப்பிடிப்பின் போது கிடைக்கும் நேரத்தைக்கூட வீணாக்காமல், அங்கேயும் போட்டோ எடுத்து அதை இணையத்தில் பகிர்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது, மஞ்சள் நிற புடவையில் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சேலையில் வீடு கட்டவா சேர்ந்து வசிக்க என பாட்டுப்பாடி அவரை வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











