For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வந்த வாய்ப்புகள் எல்லாம் கடைசி நேரம் போயிடுச்சி.. இப்போ தான் நடந்து இருக்கு பூரிப்பில் வாணி போஜன்!

  |

  சென்னை: ஓர் இரவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்.

  Recommended Video

  Vani Bhojan| Time management அப்படினா என்னன்னே எனக்கு தெரியாது | *Interview

  ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டு அம்னீசியா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

  தற்போது இவர் தமிழ் ராக்கர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். சோனி லைவ்வில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படம் குறித்தும்,படத்தின் நாயகன் அருண் விஜய் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் வாணி போஜன்.

  90ஸ் சின்னதிரை நட்சத்திரங்கள் ரீ-யூனியன்: அட இதுல யார்லாம் கலந்துக்கிட்டாங்கன்னு நீங்களே பாருங்க90ஸ் சின்னதிரை நட்சத்திரங்கள் ரீ-யூனியன்: அட இதுல யார்லாம் கலந்துக்கிட்டாங்கன்னு நீங்களே பாருங்க

  பல படங்கள் சின்ன ரோல்

  பல படங்கள் சின்ன ரோல்

  2010 ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாணி போஜன், தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தி வந்த இவர், ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டு அம்னீசியா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மகான் போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இவர் நடித்த பல காட்சிகள் மகான் படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்டது.

  பிஸியான வாணி

  பிஸியான வாணி

  சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய வாணி போஜன் தற்போது ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வாணி போஜன் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒலி நீ எனக்கு, தாழ்த்திறவா, ஊர் குருவி போன்ற பல படங்கள் வெளிவர உள்ளது. இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளிவந்தால் கண்டிப்பாக இவர் தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கவர்ச்சி, மாடர்ன், டிரடிஷனல் என்று எந்த உடையிலும் கச்சிதமாக பொருந்தக்கூடிய வாணி போஜன், அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருவார்.

  தமிழ் ராக்கர்ஸ்

  தமிழ் ராக்கர்ஸ்

  தற்போது இவர் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் வெளிவர உள்ளது. சோனி லைவ்வில் வெளிவர இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் காரணமாக வாணி போஜன் பல ஊடகத்திற்கு பேட்டிகள் வழங்கி வருகிறார். இந்த படத்தில் தனது கேரக்டர் குறித்தும், நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து வரும் வாணி போஜன், தமிழ் ராக்கர்ஸ் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடந்திருக்கும் அருண் விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து உள்ளார். முதல்முறையாக அருண் விஜய்யுடன் இணைந்து நடிப்பது எப்படி இருந்தது அனுபவம் பற்றி கூறுங்கள் என்று கேட்ட கேள்விக்கு, ஏற்கனவே அருண் விஜய்யுடன் நடிக்க எனக்கு இரண்டு படங்கள் ஒப்பந்தம் ஆகின, கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் போனது, இப்பொழுது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

  டெடிகேட்டட் பர்சன் அருண் விஜய்

  டெடிகேட்டட் பர்சன் அருண் விஜய்

  இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் பெரிய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன், மிகவும் டெடிகேட்டடாக நடிக்க கூடியவர் அருண் விஜய். அனைவரிடத்திலும் இயல்பாக பழகக் கூடியவர், படப்பிடிப்பின் போது நான் மிகவும் கம்பர்டபில் ஆக இருந்தேன். சினிமா பின்புலம் இருந்தும் அவர் அதை ஏதும் பயன்படுத்தாமல், இத்தனை வருடங்கள் போராடி தன்னை நிரூபித்து வருகிறார். படப்பிடிப்புகளின் பொழுது நண்பன் போலவே பழகினார் என்று அருண் விஜய் பற்றி வாணி போஜன் கூறியுள்ளார். 90களில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய நடிகர் அருண் விஜய் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே ஹிட் கொடுத்துள்ளார். என்னை அறிந்தால், தடையறத் தாக்க, குற்றம் 23, யானை போன்ற படங்கள் அருண் விஜய் கேரியருக்கு சிறந்த படங்களாக அமைந்தது. ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் அருண் விஜய் மற்றும் வாணி போஜன் இருவருக்கும் நல்ல பெயரை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  English summary
  Several Opportunities Came and Gone, Now Only Time Has Come to me Says Vani Bhojan
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X