»   »  நடிகர் ஷாஹித் திருமணம் ஒன்றும் டிவி சீரியல் அல்ல: முன்னாள் காதலி கரீனா கபூர்

நடிகர் ஷாஹித் திருமணம் ஒன்றும் டிவி சீரியல் அல்ல: முன்னாள் காதலி கரீனா கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் திருமணம் ஒன்றும் டிவி சீரியல் நிகழ்ச்சி அல்ல என்று நடிகையும், அவரது முன்னாள் காதலியுமான கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருக்கும், டெல்லியைச் சேர்ந்த மீரா ராஜ்புட்டுக்கும் நேற்று பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஷாஹித் கபூர் தனது திருமணத்திற்கு அழைக்காத ஒருவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தான் ஷாஹிதின் முன்னாள் காதலியும், நடிகையுமான கரீனா கபூர்.

அழைப்பு

அழைப்பு

ஷாஹித் கபூர் தனது திருமணத்திற்கு முன்னாள் காதலிகளான நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோரை அழைக்க உள்ளார் என்று செய்தி வெளியானது.

கரீனா

கரீனா

ஷாஹித் கபூர் அழைத்தால் அவரது திருமண விழாவுக்கு நிச்சயம் செல்வேன் என்று கரீனா தெரிவித்திருந்தார். ஆனால் ஷாஹித் கரீனாவுக்கு திருமண அழைப்பு வைக்கவில்லையாம்.

வாழ்த்து

வாழ்த்து

திருமணத்திற்கு ஷாஹித் தன்னை அழைக்காவிட்டாலும் கரீனா அவரை வாழ்த்தியுள்ளார். அவர் அழைக்காவிட்டால் என்ன, நானும், எனது கணவர் சயிப் அலி கானும் அவரை வாழ்த்துகிறோம் என்று கரீனா தெரிவித்துள்ளார். இது ஷாஹித்துக்கு மகிழ்சியான தருணம், அவரது திருமண விழாவை டிவி சீரியல் நிகழ்ச்சியாக்கிவிடக் கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா

பிரியங்கா

கரீனாவுக்கு மட்டும் அல்ல பிரியங்கா சோப்ராவுக்கும் ஷாஹித் திருமண அழைப்பு வைக்கவில்லை. ஷாஹித்தும், பிரியங்காவும் காதலிப்பதும், பிரிவதுமாக பல காலம் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kareena Kapoor has wished her former boyfriend Shahid Kapoor on his D-day. She said Shahid's wedding is not a TV soap opera.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil