»   »  ஷகீலாவின் " ஸ்வீட் ஷாக்"

ஷகீலாவின் " ஸ்வீட் ஷாக்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்தியத் திரை ரசிகர்களை தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியால் கட்டிப் போட்ட ஷகீலா இப்போது வித்தியாசமான வேடத்தில்மலையாளப் படமொன்றில் நடித்து வருகிறார்.

பலான படங்களில் மட்டுமே நடிப்பதை தனது பாலிசியாக வைத்திருந்தவர் ஷகீலா. தென்னிந்திய திரையுலகில் அதிக அளவிலானகற்பழிப்புக் காட்சிகளில் நடித்தவர் என்ற "பெருமையும்" ஷகீலாவுக்கு மட்டுமே உண்டு.

ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகை தனது கவர்ச்சியால் ஆட்டம் காண வைத்தவர் ஷகீலா. இவரைப் பார்த்து மம்முட்டி,மோகன்லால் போன்ற பெரிய நடிகர்களே பயந்து நடுங்கிய காலம் அது.

குடிசைத் தொழில் கணக்காக ஷகீலாவை வைத்து மாதம் ஒரு மலையாளப் படம் வெளியானது. இந்தப் படங்கள் கேரளாவில் மட்டுமின்றி,தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் டப்பிங் செய்யப்பட்டும், செய்யப்படாமலும் வெளியிடப்பட்டன.

ஒரு கட்டத்தில் ஷகீலா படம் ரிலீஸாகும் தினத்தன்று, மற்ற மலையாள நடிகர்கள் நடித்த படங்கள் வெளியானால் அவை வசூலில்திவாலாகும் நிலைமை உண்டானது.

இனியும் விட்டால் நம்ம பொழப்பு அவ்வளவுதான் என்று வெகுண்டெழுந்த மலையாளத் திரையுலகின் பெரும் தலைகள் அனைத்தும்சேர்ந்து ஷகீலாவை மிரட்டியே மலையாளத்தை விட்டு விரட்டினர்.

பின்னர் தமிழில் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார் ஷகீலா. இப்போதெல்லாம் அதீத கவர்ச்சி காட்டி நடிப்பதை அவர் கைவிட்டுவிட்டார். லேசு பாசான கவர்ச்சியுடன் கூடிய வேடங்களில் நடித்து காலம் தள்ளி வருகிறார்.

மலையாளப் படங்களில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவுடன் இருந்த ஷகீலாவை, மலையாள இயக்குநர் அலெக்ஸ் தங்கச்சன் ஒருகதையுடன் அணுகினார்.

தான் இயக்கப் போகும் "ஈ அபயதீரம்" படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

முதலில் மறுத்த ஷகீலா, தங்கச்சன் கூறிய கதையைக் கேட்டதும் அசந்து போனார். நிச்சயம் உங்களது படத்தில் நடிக்கிறேன் என்று உறுதிகூறிய ஷகீலா, இந்தப் படத்தில் நடிப்பதற்காக தமிழ் மற்றும் தெலுங்கில் வந்த சில வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறி விட்டாராம்.

ஈ அபயதீரம் படத்தில் ஷகீலாவுக்கு என்ன வேடம் தெரியுமா? கிறிஸ்தவ கன்னிகாஸ்திரி வேடம். நடிப்புத்திறமையை வெளிக்காட்டசரியான கேரக்டராம்.

கவர்ச்சி காட்டி மலையாளிகளை சந்தோஷப்படுத்திய ஷகீலா இப்போது நடிப்புத் திறமையைக் காட்டி அசத்தப் போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil