'அதுக்காக ஒழுக்கம் கெட்ட பெண்ணானாலும் பரவாயில்ல'.. கவர்ச்சி போட்டோவுடன் சிவா பட நடிகை சர்ச்சை பதிவு!
நடிகை ஷாலு ஷம்மு தனது புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: தனது இலக்கை அடைய தான் ஒரு ஒழுக்கம் கெட்டப் பெண்ணாக ஆனாலும் பரவாயில்லை என நடிகை ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இதேபோல் நிறைய படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
சமீபகாலமாக ஷாலு ஷம்முவை சுற்றி சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கவர்ச்சியான உடை அணிந்தபடி போட்டோ ஷூட் நடத்தி, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

பாரில் சல்சா நடனம்
அதேபோல் ஆண் நண்பர்களுடன் செக்சியாக நடனமாடி, அந்த வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட பப்பில் ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக, சல்சா நடனமாடிய ஷாலுவின் வீடியோ வைரலானது.

மீண்டும் கவர்ச்சி போட்டோ
இந்நிலையில் மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷாலு. செக்சியான நைட் டிரஸ் அணிந்தபடி கட்டிலில் ஷாலு அமர்ந்திருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகிறார்கள். சிலர் அவரை விமர்சிக்கவும் செய்திருக்கிறார்கள்.

நடத்தைக் கெட்டப் பெண்
தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிலவற்றையும் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார் ஷாலு. அதில், "நான் கடினமானவள். இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவள். எனக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அது என்னை ஒழுக்கம் கெட்டப் பெண்ணாக மாற்றினாலும் பரவாயில்லை", என தெரிவித்துள்ளார்.

காஸ்டிங் கவுச்
ஹீரோயின்களின் தோழியாகவும், காமெடியன்களுக்கு ஜோடியாகவும் மட்டுமே நடித்து வரும் ஷாலு ஷம்மு முதல் முதலில் மீடியா வெளிச்சத்துக்கு வந்தது 'காஸ்டிங் கவுச்' புகார் மூலம் தான். தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியது முதல் தினம் தினம் செய்திகளில் அடிப்பட்டு வருகிறார் ஷாலு.
நெகட்டிவ் பப்ளிசிட்டி
எனவே தனது வளர்ச்சிக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி தான் உதவும் என முடிவெடுத்து, இதுபோன்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது, பாரில் டான்ஸ் ஆடி வீடியோ போடுவது என தொடர்ந்து வருகிறார் அவர். ஆனால் அது எல்லா சமயங்களிலும் ஒர்க்கவுட் ஆகாது என்பதை ஷாலு உணர்வாரா என்பது சந்தேகமே.


Click it and Unblock the Notifications











