»   »  கே.எஸ். ரவிக்குமார் படத்தில் விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் ஷாமிலி

கே.எஸ். ரவிக்குமார் படத்தில் விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் ஷாமிலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் மச்சினச்சி ஷாமிலி கே. எஸ். ரவிக்குமார் இயக்கும் படத்தில் கன்னட ஹீரோ சுதீப் ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகை ஒரு கலக்கு கலக்கியவர் ஷாமிலி. மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் நடிப்பில் அசத்திய ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

பெரிய பெண்ணாக ஆனதும் ஷாமிலி சித்தார்த்துடன் சேர்ந்து ஓயே என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஷாமிலி

ஷாமிலி

ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாமிலி அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார். தனக்கு ஏற்ற கதாபாத்திரம் உள்ள கதைக்காக காத்திருந்தார்.

சுதீப்

சுதீப்

கே.எஸ். ரவிக்குமார் கன்னட ஹீரோ சுதீப்பை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். தமிழ் மற்றும் கன்னடத்தில் எடுக்கப்படும் அந்த படத்தில் சுதீப் ஜோடியாக ஷாமிலியை நடிக்க வைக்க உள்ளார்களாம்.

ரஜினி

ரஜினி

கே.எஸ். ரவிக்குமார் சுதீப்புடன் ஏற்கனவே பணியாற்ற வேண்டியது. ஆனால் ரஜினிக்காக அவர் விட்டுக் கொடுத்தார். இதையடுத்து தான் கே.எஸ். ரவிக்குமார் சுதீப் படத்தை ஒத்தி வைத்துவிட்டு ரஜினியை வைத்து லிங்கா படத்தை எடுத்தார்.

புலி

புலி

சுதீப் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் முதன்முதலாக சோலோ ஹீரோவாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது.

English summary
Buzz is that Shamili is going to be Sudeep's leading lady in his upcoming Tamil-Kannada bilingual movie to be directed by

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil