»   »  ஷமீதாவின் லீலை

ஷமீதாவின் லீலை

Subscribe to Oneindia Tamil

ஷில்பா ஷெட்டியின் தங்கச்சி ஷமீதா ஷெட்டியை வைத்து தமிழில் புதுப் படத்தைத் தயாரிக்கிறார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா.

பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு முன்பு ஷில்பாவை சீண்டுவார் யாரும் இல்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியில் வென்ற பின்னர் ஷில்பாவால் பல சர்ச்சைகள்.

ஷில்பாவின் கூடப் பிறந்த தங்கச்சிதான் ஷமீதா ஷெட்டி. தமிழில் விஜயகாந்த்துடன் ராஜ்ஜியம் படத்தில் திறமை காட்டியுள்ளார். ஆனால் படம் ஓடாததால் ஷமீதாவும் கோலிவுட்டிலிருந்து கிளம்பி விட்டார்.

இப்போது அவரை மீண்டும் தமிழுக்கு கூட்டி வருகிறார் ராம் கோபால் வர்மா. தெலுங்கிலும், பின்னர் இந்தியிலும் பிரமாதப்படுத்தியவர் வர்மா. இப்போது தனது சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் லீலை என்ற பெயரில் தமிழில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

மாதவன் தான் ஹீரோ. அவருக்கு ஜோடி போடுகிறார் ஷமீதா ஷெட்டி. இப்படத்தை தெலுங்கிலும் ஒரே சமயத்தில் தயாரிக்கிறார் வர்மா.

கடந்த ஆண்டே ராம் கோபால் வர்மா தமிழுக்கு வந்திருக்க வேண்டியவர். ஜோதிகா, சூர்யாவை வைத்து ஒரு படம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென அவர்களது கல்யாணம் முடிவாகி விட்டதால் அது கைகூடாமல் போய் விட்டது.

தமிழுக்கு வர்மா வருவது இது முதல் முறையல்ல. முன்பு நாகார்ஜூனாவை வைத்து உதயம் படத்தை தெலுங்கில் தயாரித்த வர்மா அப்படியே அதை தமிழிலும் டப் செய்து இங்கும் ஹிட் படமாக்கினார். தெலுங்குக்கு இணையாக தமிழிலும் உதயம் சூப்பர் ஹிட் படமாக ஓடியது.

இப்படத்துக்குப் பின்னர் வர்மா படு பிசியாகி விட்டார். இதனால் நேரடித் தமிழ்ப் படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

லீலையில் சதாவும் இருக்கிறார். ஆனால் இவரது கேரக்டர் படு சமர்த்தாக இருக்குமாம். சிலம்புவதற்காகவே ஷமீதா போடப்பட்டிருக்கிறாராம்.

சாயாஜி ஷிண்டேவும் படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறாராம். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ராம் கோபால் வர்மாவின் உதவியாளரான கோனா வெங்கட்தான் இப்படத்தை இயக்கப் போகிறார்.

லீலை வெல்லட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil