»   »  நடிகை சாந்தி கிருஷ்ணா 2 வது விவாகரத்து!

நடிகை சாந்தி கிருஷ்ணா 2 வது விவாகரத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பன்னீர் புஷ்பங்கள் புகழ் நடிகை சாந்தி கிருஷ்ணா மீண்டும் விவாகரத்து செய்துள்ளார்.

தமிழில் பாரதிவாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. இவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரி. மலையாளத்தில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், அன்புள்ள மலரே, நேருக்கு நேர் போன்ற படங்களிலும் நடித்தார்.

Shanthi Krishna divorced her 2nd husband!

இவர் கடந்த 1984-ம் ஆண்டு மலையாள நடிகர் ஸ்ரீநாத் என்பவரை திருமணம் செய்தார். 11 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்த இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன்பின் 1998-ல் கொல்லத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபரான பஜோர் சதாசிவம் என்பவரை சாந்தி கிருஷ்ணா 2-வது திருமணம் செய்தார். அவர்களுக்கு இடையேயும் சண்டை ஏற்பட்டு 2-வது கணவரையும் சாந்தி கிருஷ்ணா பிரிந்தார்.

இருவரும் கர்நாடகாவில் வசித்து வந்ததால் அங்குள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு செய்தனர். நேற்று அவர்களுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளதாக சாந்தி கிருஷ்ணா அறிவித்துள்ளார்.

English summary
Popular Malayalam - Tamil actress Santhi Krishna divorced her second husband Bajore Sadasivan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X