»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் அழிவதில்லைக்குப் பிறகு என் மகன் சிம்பு எங்கேயோ போய் விடுவான் என்று மார் தட்டி வந்தார் டி.ஆர்.

ஆனால், சிம்பு எங்கே போனாரோ தெரியவில்லை, அவருக்கு ஜோடியாக நடித்த ஷார்மி வெகு விரைவில்உச்சத்திற்குப் போய் விடுவார் என்கிறார்கள்.

மும்பையிலிருந்து டி.ஆரால் கோலிவுட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பஞ்சாப் பெண்ணான ஷார்மிக்குஇப்போத கை நிறைய படங்கள் குவிந்துள்ளன. காதல் அழிவதில்லை படத்தில் அவ்வளவு அழகாகநடித்துவிட்டாரா என்று கேட்காதீர்கள்.

அதில் சும்மா வந்து நின்றார், முடிந்தவரை கவர்ச்சி காட்டினார், சிரித்தார், போனார். அவ்வளவு தான். இதுபோதாதா நம் தயாரிப்பாளர்களுக்கு.

எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் எடுத்தஎடுப்பிலேயே சொல்லி விடுகிறாராம் ஷார்மி.

அப்புறம் என்ன, பேச வேண்டியதைப் பேசி விட்டு கொடுக்க வேண்டியதை (ஷார்மி கேட்பதை விட கொஞ்சம்தூக்கலாகவே) கொடுத்து விட்டு நடையைக் கட்டுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

இது தவிர கேரளா, ஆந்திரா தயாரிப்பாளர்களும் அவரிடம் ஓடி வர ஆரம்பித்துள்ளனர். வருபவர்களிடம் எல்லாம்அட்வான்சும் வாங்கி கால்ஷீட்டும் தந்துவிட்டார்.

இதனால், சிம்புவை விட ஷார்மி கைவசம் இப்போது நிறைய படங்கள்.

இப்போது ஆஹா எத்தனை அழகு, பி.வாசுவின் காதல் கிசுகிசு மற்றும் காட்டுச் சம்பகம் என்ற மலையாளப்படத்திலும் நடித்து வருகிறார்.

காட்டுச் சம்பகம் படத்தில் இவருக்கு ஆதிவாசிப் பெண் வேடத்தில் ஒரு பாடல் காட்சி வைக்கப்பட்டிருந்தது.

உடலெங்கும் ஆப்பிரிக்கா ஆதிவாசி மாதிரி இலை, தழைகளைக் கட்டிக் கொண்டு வந்தார். இவர் யானை மீது உட்கார்ந்து செல்வது போலகாட்சி எடுக்கப்பட இருந்தது.

ஆனால், இவரது காஸ்ட்யூமைக் கண்ட யானையே மிரண்டுவிட்டதாம். அதன் மீது ஏறி உட்கார்ந்த மறுகணம் ஷார்மியை கீழேதள்ளிய யானை அங்கிருந்து ஓடிவிட்டது. இதில் ஷார்மிக்கு முகத்திலும் கைகளிலும் லேசான காயம் ஏற்பட்டது.

பின்னர் ஷார்மியை வைத்தே அந்த யானைக்கு நிறைய வாழைப் பழங்களைத் தந்து, பழக்கி நடிக்க வைத்தார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil