»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

முதல் படம் கவுத்தி விட்டாலும் கூட அடுத்த படத்தில் எப்படியும் நல்ல இடத்தைப் பிடிப்பேன் என்று மார்தட்டிக் கூறி வருகிறார்ஷர்மிலி.

"சூப்பர் குட் பிலிம்ஸ்" அதிபர் ஆர்.பி. சவுத்ரியின் மகன் ஜீவாவுடன் ஷர்மிலி ஜோடி சேர்ந்த முதல் படமான "ஆசை ஆசையாய்"சுமாராகவே ஓடியது. ஆனாலும் ஷர்மிலிக்கு வேறு சில பட வாய்ப்புகளும் வந்தன.

குறிப்பாக ஏவி.எம்மின் "அன்பே அன்பே" படம். இதில் ஷர்மிலிக்கு நல்ல ரோலாம். நன்றாகவும் நடித்திருப்பதாக அவரேசொல்கிறார். இந்தப் படத்தில் அவர் ஷாமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் நிச்சயம் தன்னைக் கரையேற்றும்ம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் ஷர்மிலி. இவர் ஒரு எம்.சி.ஏ. பட்டதாரிஎன்பது உங்களுக்குத் தெரியுமோ?.

கமலின் சஸ்பென்ஸ்!

கமல் தயாரிப்பில் உருவாகவுள்ள "சண்டியர்" படத்தின் கதை குறித்து கமல்ஹாசன் மிகுந்த சஸ்பென்ஸை ஏற்படுத்தி வருகிறார்.

வித்தியாசமான கமல் படமாக இது இருக்கும் என்று மட்டும் அவர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் கதை குறித்துதான் தினசரிஒரு தகவல் பரவி வருகிறது.

"சண்டியர்" படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கமல்ஹாசனே எழுதுகிறார். இயக்கமும் அவரே.

கமல் தவிர சத்யராஜ், நாசர் ஆகியோரும் இதில் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். மூன்று பேரும் வில்லத் தனமான ரோலில்நடிக்கப் போவதாகக் கூறி வருகிறார்கள். அதே சமயம் கமல்ஹாசனின் சமீபத்திய படங்கள்போல் அல்லாமல் மிகவும்வித்தியாசமான முறையில் இந்தப் படம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

நடிப்பு தவிர மட்டுமல்ல அல்லாமல் ஆக்ஷன், காமெடி, வில்லத்தனம், சண்டைக் காட்சிகள் என சகலவிதமான கமலை இதில்பார்க்கலாமாம்.

கமலுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் புரிகிற மாதிரி படம் எடுத்தால் சரி!

Read more about: actors, actress, cinema, mumtaj, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil